Print
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் பழனியாண்டவர் பண்பாட்டுக் ககல்லூரி
பல்கலைக்கழக பெயர் சென்னைப் பல்கலைக்கழகம்
நகரம் பழனி
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் ம. ராஜாத்தி செல்வக்கனி
நகரம் பழனி
ஆய்வு விவரம்
தலைப்பு சூரியகாந்தன் நாவல்களில் நாட்டுப்புறவில் கூறுகள்.
வகைமை இக்காலஇலக்கியங்கள்
துணை வகைமை நாவல்
பதிவு நாள் 2006
நெறியாளர் பெ. சுப்பிரமணியன்
துணை நெறியாளர் பெ. சுப்பிரமணியன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
நாவல் இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கலை வடிவங்களில் முதன்மையானது எனலாம். நாவல் இலக்கியத்தை ஆராய்வதன் மூலம் சமூக வாழ்க்கையின் பல்வேறு போக்குகளை அறிந்து கொள்ளமுடிகின்றது. நாவலாசிரியர் சூர்யகாந்தன் கொங்குநாட்டைக் களமாக கொண்டு வட்டார நாவல்களைப் படைத்து வருகின்றார். வட்டாரவியல் நாவல் வகைகளில் நாட்டுப்புறவியல் கூறுகள் இணைந்து அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது. வாய்மொழி இலக்கியமும் வரிவடிவ இலக்கியமும் இணைந்து வட்டாரவியல் நாவல்களில் வளர்ந்துள்ள பாங்கு அறிந்து கொள்ளத்தக்கதாகும்.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் நாட்டுப்புறவியல் ஆய்வு அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை, நாட்டுப்புறப் பண்பாட்டுக் கோட்பாடு, பகுப்பாய்வு முறை, சமூகவியல் ஆய்வு அணுகுமுறை, களஆய்வும் கையாளப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு 1. முன்னுரை 2. நாவல் இலக்கியமும் நாட்டுப்புறவியல் கூறுகளும் 3. சூர்யகாந்தன் நாவல்களில் நாட்டுப்புற மரபுகள் 4. சூர்யகாந்தன் நாவல்களில் இடம்பெறும் நாட்டுப்புற பாத்திரங்கள் 5. சூர்யகாந்தன் நாவல்கள் காட்டும் நாட்டுப்புற வாழ்க்கை முறை 6. முடிவுரை
முடிவுரை:-
‘முடிவுரை’யில் ஏனைய இயல்களில் கண்ட ஆய்வு முடிவுகளைத் தொகுத்தளிக்கின்றது.