Print
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் தேசியக்கல்லூரி
பல்கலைக்கழக பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நகரம் திருச்சி
மாவட்டம் திண்டுக்கல் சாலை
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் பா. கணேசன்
நகரம் திருச்சிராப்பள்ளி
ஆய்வு விவரம்
தலைப்பு சமுதாய நோக்கில் நாளிதழ்களின் பணிகள் - ஓர் ஆய்வு
வகைமை இதழியல்
துணை வகைமை நாளிதழ்
பதிவு நாள் 2000
நெறியாளர் ச. ஈஸ்வரன்
துணை நெறியாளர் ச. ஈஸ்வரன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
செய்திகளைத் திரட்டுவதும் பரப்புவதும் இதழியல், ஆகும்பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியால் மக்களுக்குக் கிடைத்த தகவல் தொடர்பு சாதனங்களுள் இதழியலும் ஒன்று. மக்களின் நலனையே பிரதான நோக்கமாகக் கொண்டு உலக மக்கள் அனைவரும் பேதமின்றி ஒன்று கூடும் பொருட்டு ‘நாட்டில் நல்லன மலியவும், அல்லன ஒழியவும்,’ அரசுக்கும், மக்களுக்கும் இணைப்புப் பாலமாக அரசின் நான்காம் தூணாகத் திகழ்கிறது இதழியல். இதழியல் துறையின் அடிப்படையில் மக்கள் விழிப்புணர்வை அடைத்து பயன் பெறும் முகமாக நாளிதழ்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகள் இவ்வாய்வேட்டில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
ஆய்வின் கருதுகோள்
நாளிதழ்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் பணி, மக்கள் சிந்திப்பதற்கும், எண்ணுவதற்கும் உரிய வகையில் உள்ளதை இவ்வாராய்ச்சி கருதுகோளாகக் கொண்டுள்ளது.
ஆய்வு முறைகள்
நாளிதழ்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் பணி பற்றி ஆராய்ந்து மதிப்பீடுகின்ற வகையில் விளக்க முறைத் திறனாய்வும், பகுப்பு முறைத் திறனாய்வும் இவ்வாய்வில் பின்பற்றப்பெறும்.
ஆய்வேட்டின் அமைப்பும், பகுப்பும்:-
சமுதாய நோக்கில் நாளிதழ்களின் பணிகள் - ஓர் ஆய்வு என்னும் இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக பின்வரும் நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.அவை 1. அறிவித்தல் 2. அறிவுறுத்தல் 3. மகிழ்வூட்டல் 4. சமுதாயமும், இதழ்களும் என்பனவாகும்
இயல் 1
நாளிதழ்கள் செய்திகளைத் தருகின்ற முறையால் படிப்பவர் கவர்ந்திழுக்கப்பட்டு அவர் தம்மீது பற்றுக் கொள்ளவும், அன்றாடம் தம்மைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளும் பொருட்டு பலவகைச் செய்திகளை அறிவிக்கின்றன. அவ்வகையில் அரசியல் செய்திகள், அரசுச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், குற்றவியல் செய்திகள், வேலை வாய்ப்புச் செய்திகள், விளம்பரச் செய்திகள், இன்றைய நிகழ்ச்சி நிரல், மொழி நடை, திறனாய்வு ஆகியவைகளைக் குறித்து இம்முதல் இயல் எடுத்துரைக்கப்படுகிறது.
இயல் 2
‘அறிவுறுத்தல்’ என்னும் தலைப்பில் செய்தித்தாள்கள் சிக்கலான செய்திகளுக்கு விளக்கங்கள் அளிக்க கடமைப்பட்டுள்ளதன் பொருட்டு இதழ்களின் இன்றியமையாப் பகுதிகளாகத் திகழும் தலையங்கம், வாசகர் கடிதம், கருத்துப்படம், மருத்துவம், சான்றோர் கட்டுரைகள் ஆகியவைகளைக் குறித்து இவ்விரண்டாம் இயல் ஆராயப்படுகின்றது.
இயல் 3:
‘மகிழ்வூட்டல்’ என்ற இயலில் செய்தித்தாள்கள் வெளியிடும் சிக்கலான, சிந்தனைக்குரிய செய்திகளைத் தொடர்ந்து படிப்போருக்கு அயர்வு தோன்றாதிருக்கும் பொருட்டு பொழுது போக்காகவும் மனமகிழ்ச்சி அளிப்பதாகவும் அமையும் வகையில்உள்ள திரைப்படம், சிறுகதை, தொடர் கதை, புதுக்கவிதை, நகைச்சுவைப் பகுதிகள் (துணுக்குகள்) ஆகியன குறித்து இவ்வியல் விளக்கப்படுகிறது.
இயல் 4:
ஜனநாயக நாட்டில் சமுதாய மக்களின் காவலனாகத் திகழும் இதழ்கள் காலப்போக்கில் மக்களோடு ஒன்றி முன்னேற்றம் கண்டுள்ள நிலையையும் அவ்விதழ்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையையும் காட்டும் வகையில், ஜனநாயகத்தில் இதழ்களின் பணி, அச்சு – மின் சாதனங்கள், இன்றைய தமிழ் இதழ்கள், இதழ்களின் இன்றைய நிலைமை போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முடிவுரை
இதழியல்துறை அறிவியல் முன்னேற்றத்தால் பன்முக வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழ் இதழியல் வரலாற்றை நுணுகிநோக்கின், அது பல வளர்ச்சிக் கட்டத்தைத் தாண்டி முன்னேறியுள்ளது புலனாகும். தொடக்கால இதழ்கள் சமய அடிப்படையிலே எழுந்தன. கிறிஸ்துவ சமயத்தைப் பரப்ப பல இதழ்கள் தோன்றின. இந்து சமயத்தைப் பாதுகாக்கப் பல இதழ்கள் தோன்றின. இஸ்லாம் சமயத்தை வளர்க்கப் பல இதழ்கள் தோன்றின. சமய இதழ்களையடுத்துச் சமூக (சாதி) இதழ்கள் தோற்றம் பெற்றன. நாடு விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வு அனைத்து மக்களிடையேயும் இருந்தது. சுதந்திர வேட்கையை வீறுகொண்டெழச் செய்யப் பல தேசிய இதழ்கள் தோன்றின. நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே இலட்சிய நோக்கோடு செயல்பட்டன. அதனால் தான் பத்திரிக்கைகள் அடிமை நாடுகளில் விடுதலைக்கு வித்திடுகின்றன. விடுதலை பெற்ற நாடுகளில் ஜனநாயகக் காவலனாகத் திகழ்கின்றன. விடுதலைப் பெற்றபின் பல அரசியல் கட்சி இதழ்கள் தோற்றம் பெற்று அக்கட்சியின் கொள்கைகளையும், இலட்சியங்களையும் விளக்கின. நடுநிலை இதழ்களும் தோற்றம் பெற்றன. புலனாய்வு இதழ்கள் தமிழ் இதழியலுக்குப் புது வரவாகும். இன்று கனிணி முதலிய அனைத்துத் துறைகளைப் பற்றியும் இதழ்கள் வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தொழில்துறை இதழ்களும்வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்பொழுது புதிதாகத் தொடங்கப்பட்ட ‘பெண்மணி இதழ்’ குறுகிய காலத்தில் இலட்சக் கணக்கான வாசகர்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பல்துறை வளர்ச்சியில் மக்களின் பங்கு பற்றி இவ்வாய்வேடு விரிவாக விளக்குகிறது.
கருதுகோள் நிரூபணம்
“நாளிதழ்கள்; சமுதாயத்திற்கு ஆற்றும் பணி மக்கள் சிந்திப்பதற்கும், எண்ணுவதற்கும் உரிய வகையில் உள்ளது” என்ற ஆய்வின் கருதுகோள் இவ்வாய்வேட்டின் வழி நிரூபிக்கப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.
ஆய்வுப்பயன்
‘பருவ இதழ்களும் சமுதாயமும்’, ‘இதழ்களும் இலக்கிய வளர்ச்சியும்’, ‘தனமணியும் சமூக நோக்கும்’, என்பன போன்ற தலைப்புகளில் ஆய்வு நிகழ்த்துவோர்க்கு இவ்வாய்வேடு பயன்தரும்.