Print
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் செந்தமிழ்ககல்லூரி
பல்கலைக்கழக பெயர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் கோ. சுப்புலெட்சுமி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு பாரதியார் படைப்புகளில் பஞ்சபூதங்கள்
வகைமை இக்காலஇலக்கியங்கள்
துணை வகைமை கவிதை
பதிவு நாள் 2008
நெறியாளர் ஜி.டி. நிர்மலா
துணை நெறியாளர் ஜி.டி. நிர்மலா
ஆய்வு விளக்கம்
முன்னுரை
மகாகவி பாரதியார் ஒரு கவிஞர் என்று மட்டுமே பலர் அறிந்திருக்கிறார்கள். பாரதியார் மிகச்சிறந்த கட்டுரையாளர். சிறந்த மொழிபெயர்ப்பாளர், சிறந்த பத்திகையாளர் என்பதை அவரது படைப்புகளைப் படித்தோர் அறிவர். பாரதியார் ஒரு புதுமைக் கவிஞர், அவரது கவிதைகள் உணர்ச்சி வேகத்தின் வெளிப்பாடுகள் என்றால், கட்டுரை ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. அவர் சிந்திக்காத, எழுதாத துறைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டு எழுதியவர். அரசியல், சமூகம், சமயம், வரலாறு, இதழியல், பெண்விடுதலை, சமகாலப் பிரச்சினைகள் ஆகிய அனைத்தையும் அவரது படைப்புகளில் காணலாம்.
ஆய்வு அணுகுமுறை
பாரதியாரின் படைப்புகளில் பஞ்சபூதங்கள் பற்றி விளக்கமாகக் கூறுவதால் விளக்கமுறைத் திறனாய்வும், மதிப்பீட்டு முறைத் திறனாய்வும் அமையும்.
ஆய்வேட்டின் அமைப்பு
இவ்வாய்வேடு ஒன்பது இயல்களைக் கொண்டது. அவை 1. ஆய்வு முன்னுரை 2. ஆசிரியர் அறிமுகம் 3. பஞ்சபூதங்கள் விளக்கம் 4. பாரதியாரின் படைப்புகளில் நிலம் 5. பாரதியாரின் படைப்புகளில் தீ 6. பாரதியாரின் படைப்புகளில் நீர் 7. பாரதியாரின் படைப்புகளில் காற்று 8. பாரதியாரின் படைப்புகளில் ஆகாயம் 9. ஆய்வுத் தொகுப்புரை என்பனவாகும்
இயல் 1
ஆய்வு முன்னுரை என்னும் முதலாவது இயலில் ஆய்வுத் தலைப்பு, ஆய்வின் நோக்கம், ஆய்வுக்கான எல்லைகள், ஆய்வு அணுகுமுறைகள், ஆய்வேட்டின் அமைப்பு ஆகியன கூறப்படுகின்றன.
இயல் 2:
‘ஆசிரியர் அறிமுகம்’ என்ற இரண்டாம் இயலில் பாரதியாரின் ஆற்றல்கள், சிந்தனைகள் போன்ற செய்திகள் இடம்பெறுகின்றன.
இயல் 3
பஞ்சபூதங்கள் பற்றிய செய்திகள் பல்வேறு இலக்கியங்களில் கூறப்படுகின்ற முறைகள் பற்றியும், பாரதியாரின் படைப்புகளில் அவை பெறும் இடம் பற்றியும் ‘பஞ்சபூதங்கள் விளக்கம்’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இயல் 4:-
பாரதியார் படைப்புகளில் ஆன்மீக ரீதியாகவும், தேசத்தின் வருணனையைக் குறிக்கின்ற போதும், இயற்கை வருணனையிலும் பெண்ணியச் சிந்தனை, சமுதாயச் சிந்தனையிலும் நிலம் இடம்பெறுகின்ற விதம்குறித்தும் ‘பாரதியாரின் படைப்புகளில் நிலம்’ என்ற இவ்வியலில் ஆராயப்படுகின்றது.
இயல் 5:-
‘பாரதியாரின் படைப்புகளில் தீ’ எனும் ஐந்தாவது இயல் நெருப்பு, குணங்களைக் குறிக்கவும், குறியீடாகவும், வழிபாடாகவும்,அமைவதையும்பிற கவிஞர்களுடன் ஒப்பிட்டும் பாரதியார் படைப்புகளில்தீ பெறும் இடம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இயல் 6:-
‘பாரதியாரின் படைப்புகளில் நீர் ‘ எனும் ஆய்வில் கடல்நீர், ஆற்றுநீர், மழைநீர், நீர்நிலைகள் போன்ற வகையில் நீர்பயன்படும் தன்மை, நீரின் இயல்புகள், நீர்வளம் போன்றவை குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இயல் 7:-
‘பாரதியாரின் படைப்புகளில் காற்று’ எனும் இயலில் காற்றின் மென்மை, வன்மை, தூய்மை, மேன்மை போன்ற பிரிவுகளில் பாரதியாரின் கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளன.
இயல் 8:-
‘பாரதியாரின் படைப்புகளில் ஆகாயம்’ என்னும் இயலில் வானம் விசாலமான தன்மை காரணமாகவும் வானவியல் அறிவியலாகவும், விழிப்புணர்ச்சி ஊட்டவும், இயற்கைக் காட்சியாகவும் அமைந்துள்ள விதங்கள் குறித்து விளக்கும் வகையில் பாரதியார் படைப்புகளில் வானம் அமைந்துள்ளது. தொல்காப்பியர் கூறிய நூற்பா முறைப்படி பஞ்சபூதங்கள் நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
முடிவுரை
பாரதியார் படைப்புகளில் பஞ்சபூதங்கள் என்னும் தலைப்பிலான இவ்வாய்வில் கண்ட கருத்துக்கள் தொகுப்புரையாகத் தொகுத்துத்தரப்பட்டுள்ளன. பாரதியார் மக்கள் விடுதலைக்காகப் பாடிய ஒரு புதுமைக் கவிஞராவார். அந்நிய ஆதிக்கத்தில் அடிமைகளாக முடங்கிக் கிடந்த மக்களுக்குத் தமது பாடல்களால் விழிப்புணர்வு ஊட்டினார். சமத்துவ சமுதாயம், பெண் விடுதலை, நாட்டின் பொருளாதார மேம்பாடு போன்ற உயர்ந்த சிந்தனைகளைத் தமது படைப்புகளில் எடுத்துக்காட்டியுள்ளார். பாரதியார் படைப்புகளில் பஞ்சபூதங்கள் என்ற இவ்வாய்வின் மூலமாக பாரதியாரின் கவிதைச் சிறப்பு, பன்மொழி அறிவு, பல்துறை அறிவு, அறிவியல் கருத்து, ஆன்மீகக் கருத்து போன்ற அனைத்தையும் அறிந்த கொள்ள முடிகின்றது.