Print
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் அடைக்கல மாதா கல்லூரி
பல்கலைக்கழக பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நகரம் வல்லம்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 613 403
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் கா. லட்சுமி
நகரம் வல்லம்
ஆய்வு விவரம்
தலைப்பு உவமை இலக்கணம் - ஓர் ஆய்வு
வகைமை இலக்கணம்
துணை வகைமை அணி
பதிவு நாள் 2007
நெறியாளர் இராம. சிதம்பரம்
துணை நெறியாளர் இராம. சிதம்பரம்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘உவமை இலக்கணம் - ஓர் ஆய்வு’ எனுத் தலைப்பின் கீழ் இலக்கண நூல்கள் உவமைக்குக் கூறும் இலக்கணங்கள், உவம வகைகள், உவம உருபுகள், உவமையின் பிற வடிவங்களாகிய உருவகம், உள்ளுறை, இறைச்சி, படிமம், தொன்மம் போன்றவற்றின் சான்றாதாரங்களை இவ்வாய்வுத் தலைப்பு சுமந்துள்ளது.
கருதுகோள்:-
உவமையின் இலக்கணத்தை, உவமைக்குரிய பொருள் அதற்குரிய இலக்கணம் வகைகள், அவ்வுவம வகைகள் இலக்கியங்களில் பொருத்தி வரல், உவமைச் சொல் (உவம உருபு) உவமையில் பல்வேறு வடிவங்கள். இலக்கணமாயினும் இலக்கியம் சிறக்க காரணியாக விளங்கும் நிலை என்பவற்றை விளக்குவதையே கருதுகோளாகக் கொண்டு இவ்வாய்வேடு அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் ஒவ்வியல் ஆய்வாகவும், விளக்கமுறை ஆய்வாகவும் இரு நிலைகளில் இவ்வாய்வு நெறி உணரப்பட்டது.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களை உள்ளடக்கியுள்ளது. 1. உவமை விளக்கம் - அது கூறும் நூல்கள் 2. உவமை இலக்கணத் தோற்றமும் விளக்கமும் 3. உவமையின் காலத்திற்கேற்ற வளர்ச்சி 4. உவம உருபுகள் 5. உவம வகைகள் 6. இலக்கியங்களில் உவமையின் பங்களிப்பு
முடிவுரை:-
தொல்காப்பியததுள் உவமை பயன்படுத்தப்பட்ட இடங்கள், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் போன்றோர்தம் குறிப்பிடத்தக்க உரை வேறுபாடுகள் மற்றும் விளக்கங்கள், அணியிலக் கணத்தில் உவமை பெறுமிடம், உவமைக்குரிய நிலைக்களன்கள் குறித்து ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. உவமை இலக்கணத்தின் ஆட்சியை இலக்கண நூல்களைக் கொண்டு விளக்கியும், மொழி வளர்ச்சிக்கு உவமையின் பங்களிப்பு பற்றி ஆய்ந்தும், உவமையின் பிற வடிவங்களக உருவகம், உள்ளுறை, இறைச்சி, படிமம், தொன்மம் போன்றவை தக்க சான்றுனளுடன் விளக்கப்பட்டு இலக்கியச் சுவை கூட்டலுக்கு உவமையின் தேவையும் சுட்டப்பட்டுள்ளது. காலந்தோறும் இலக்கிய வகைகளில் உவமையின் பயன்பாடுகள் மாறிவந்த சூழலைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளது. இவ்வாய்வேட்டின் வழி உவமையின் இலக்கணம், அது கூறும் நூல்கள் உவமையின் வகைகள், உவம உருபுகள் போன்ற அதன்வேறு வடிவங்கள் இலக்கண இலக்கிய நோக்கிலும், சாமாரண பாமரரும் அறிய விழையும் பொழுது ஆய்வேட்டின் சுவை குன்றாதிருக்க இடையிடையே ஆய்விற்குத் தேவைப்பட்ட ஒரு சில திரைப்படப் பாடல்கள் மேற்கோள்களாகவும் இலக்கண நோக்கிற்கிடையே இடம் பெற்றுள்ளன.