Print
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி
பல்கலைக்கழக பெயர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நகரம் தூத்துக்குடி
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 628 002
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் கு. நீதா
நகரம் தூத்துக்குடி
ஆய்வு விவரம்
தலைப்பு அ.க. நவநீத கிருட்டிணன் இலக்கியப் பணிகள்
வகைமை படைப்பிலக்கியம்
துணை வகைமை தனிஆள் ஆய்வு
பதிவு நாள் 2000
நெறியாளர் ந. காந்திமதி லட்சுமி
துணை நெறியாளர் ந. காந்திமதி லட்சுமி
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
தமிழ்ப் புலவர் வரிசையில் இந்நூற்றாண்டு கண்ட பெருமகனாராக விளங்குபவர் அ.க. நவநீதகிருட்டிணன் ஆவர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழாசிரியர் அறிஞர். திருக்குறள் மணி அ.க. நவநீதகிருட்டிணனின் முழுமையான தமிழ்ப் பங்களிப்பை ஆய்வதாக இவ்வாய்வு அமைகிறது.
ஆய்வு அணுகுமுறை:
இவ்வாய்வில் விளக்கவியல் ஆய்வு அணுகுமுறையும். பகுப்பியல் ஆய்வு அணுகுமுறையும். திறனாய்வு முறையும் பயன் கொள்ளப்பட்டன.
ஆய்வேட்டின் அமைப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை. முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டது. 1. அ.க. நவநீதகிருட்டிணன் வாழ்வும் பணியும் 2. அ.க. நவநீதகிருட்டிணன் எழுத்துப்பணி 3. அ.க. நவநீதகிருட்டிணன் பேச்சுப்பணி 4. அ.க. நவநீதகிருட்டிணன் கலைப்பணி 5. அ.க. நவநீதகிருட்டிணன் அறிவுப்புலம்
முடிவுரை:-
1. தனிமனித வரலாறும். சமுதாய வரலாறும் பின்னிப் பிணைந்தவை. அ.க.ந. வின் வாழ்வுக்கால சமூக நெறி இவர்தம் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்பட அமைந்துள்ளது. 2. சைவ சமயச் சார்பும் தமிழ். தமிழர் முன்னேற்றப்பேச்சு பொருள் இயக்கச் சார்பும் இவர் தம் இருகண்களாக விளங்கக் காண்கிறோம். 3. அ.க.ந. தம் எழுத்து. பேச்சு ஆகியன சிறக்க வேண்டி பொதுமக்கள் அனுபவச் சாரமாகிய பழமொழிகளையும். கல்வி வல்லார் கருத்துரையையும் பயன் கொள்ளும் வழக்கத்தினர். 4. பழமை போற்றுவதோடு இவர்க்குப் புதுமைக்காணும் ஆவலும் உண்டு. பொருத்தமுடைய புதுப்பொருளைச் சுவைப்படப் பொருத்திக்காட்டும் இவரிடம் காணமுடிகிறது.