Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதியார் பல்கலைக்கழகம்
நகரம் கோயம்புத்தூர்
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் அ. அருள்சீலி
நகரம் கோயமுத்தூர்
ஆய்வு விவரம்
தலைப்பு கிறித்துவப் பிள்ளைத்தமிழ் நூல்கள்
வகைமை சிற்றிலக்கியங்கள்
துணை வகைமை பிள்ளைத்தமிழ்
பதிவு நாள் 2006
நெறியாளர் ம. மனோன்மணி
துணை நெறியாளர் ம. மனோன்மணி
ஆய்வு விளக்கம்
முன்னுரை
கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்கள் பதினைட்டையும் ஒருசேரக்திரட்டி ஆராய்வது புதிய சிந்தனைகளை உறுவாக்கும். அந்த அடிபெடையில் இந்த ஆய்வு முதன்மை ஆய்வாக அமைகின்றது.
ஆய்வு அணுகுமுறை
பகுப்பாய்வு, விளக்க அணுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. முன்னுரை 2. கிறித்துவமும் தமிழும் 3. பிள்ளைத்தமிழின் தோற்றமும் வளர்ச்சியும் 4. கிறித்துவப் பிள்ளைத்தமிழ் நூல்கள் 5. விவிலியத்தாக்கம் 6. இலக்கியச் சிறப்புகள் 7. சமுதாயச் சிந்தனைகள் 8. முடிவுரை ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது.
முடிவுரை
தமிழில் பல்கிப் பெருகியுள்ள பிள்ளைத்தமிழ் நூல்களுள் பதினெட்டு நூல்கள் கிறித்துவ சமயம் சார்ந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒன்றும், இருபதாம் நூற்றாண்டில் பதினான்கும், இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒன்றும் ஆகப் பதினாறு நூல்கள் முழுமையாக வெளிவந்துள்ளமை தெளிவாகிறது. புலவர் சாதிநாதர் 1860 ஆம் ஆண்டு சேசுநாதர் பிள்ளைத்தமிழைத் தந்துள்ளார் புலவர் ஆனந்தன். 2004 ஆம் ஆண்டு ஏசுபிரான் பள்ளைத்தமிழை வழங்கியுள்ளர். அவற்றுள் ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பதினைந்து பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் மூன்று கிறித்துவப் பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடியவருள் என்மர் கிறித்துவ சமயத்தவர். இறைவன் இயேசு பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் எட்டு அன்ணை மரியாள் பற்றிய பிள்ளைத்தமிழ் மூன்று, திருத்தொண்டர் பற்றிய பிள்ளைத்தமிழ் ஏழு. கிறித்தவ பிள்ளைத்தமிழ் நூல்களில் உவமை, உருவகம், இயல்பு, நவிற்சி, உயர்வுநவிற்சி, இரட்டுறமொழிதல் மடக்கு ஆகிய சொல்லணிகளும் பொருளணிகளும் அமைந்துள்ளன. இறைவன் எழுந்தருளும் திருத்தலங்களைப் புகழ்ந்துபாடும் தலபுராணங்களாகவும் பிள்ளைத்தமிழ் நூல்கள் அமைந்துள்ளன.