Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதியார் பல்கலைக்கழகம்
நகரம் கோயம்புத்தூர்
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் இரா. வீரபத்திரன்
நகரம் கோயமுத்தூர்
ஆய்வு விவரம்
தலைப்பு சிற்றிலக்கிய வகைகள் - தோற்றமும் வளர்ச்சியும்
வகைமை சிற்றிலக்கியங்கள்
துணை வகைமை வகை
பதிவு நாள் 2008
நெறியாளர் தே. ஞானசேகரன்
துணை நெறியாளர் தே. ஞானசேகரன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
இலக்கியங்கள் தமிழ்ச் சோலையில் செல்வாக்குப் பெற்று வளர்ந்ததால் தமிழ்மொழி சீரிளமைக் கன்னியாய் என்னும் தொடர்ந்து வாழும் காலத்தோறும் தமிழ்ச் சோலையில் பல புதுவகையான இலக்கியங்கள் புதுமணம் பரப்பிக் கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் தமிழ்ச் சிற்றிலக்கியங்களை ஆய்வுக் களமாக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வு அணுகுமுறை
பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு, விளக்கவியல், அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
கருதுகோள்
இல்லை
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. சிற்றிலக்கியங்களில் தோற்றமும் வளர்ச்சியும் 2. பாட்டியலும் சிற்றிலக்கியங்களும் 3. மஞ்சரி இலக்கியங்கள் 4. காதல் இலக்கியங்கள் 5. ஊடல் இலக்கியங்கள் ஆகிய இயல்களைக் கொண்டது.
முடிவுரை
ஒருவகைச் சிற்றிலக்கியம் மற்றொருவகை சிற்றிலக்கியம் தோன்றுவதற்கு வாய்பாகவும் பிற சிற்றிலக்கியங்களின் கூறுகளை தன்னத்தே கொண்டும் விளங்குகின்றது. சிற்றிலக்கிய வகைகளில் ஒரு சில இலக்கியங்கள் ஒரே இலக்கணம் பெற்றிருந்தும் பல்வேறு பெண்களில் காணப்படுகின்றன. இன்னும் சில இலக்கியங்கள் சிறுவேறுபாடு காரணமாக தனிவகை இலக்கியமாகவும் விளங்குகின்றன. சிற்றலக்கியங்கள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்படினும் பொருண்மைச் சிறப்பால் சில இலக்கியங்கள் மட்டுமே இன்னும் நிலைத்து வாழ்ந்துவருகின்றன. மஞ்சரிக்கு என்பதற்குப் பூங்கொத்து, பூமாலை, தளிர், மலர்க்காம்பு, ஒழுக்கம் முதலிய பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன. பலவகை மலர்களால் தொடுக்கப்படுவது பூமாலை ஆதல் போல பல பாடல்களைத் தொகுத்துக் கூறும் மஞ்சரி இலக்கியம் எனப்படுகிறது. மஞ்சுரி இலக்கியத்தில் கேசாதிபாதம், தசாங்கம், குறம், உலா, தூது போன்ற சிற்றிலக்கியங்களில் சாயலும் பாங்கும் காணப்படுகின்றன. சங்க இலக்கியக்காதல் தலைவன் மீது பாடப்பட்ட மானிடக் காதலாக இருந்தது அது பக்தி இலக்கியத்தில் இறைக்காதலாக மாறியது. சிற்றிலக்கியத்தில் மீண்டும் மானிடக் காதலாக மாற்றம் பெற்றுள்ளது. காதல் இலக்கியங்கள் கண்ணியமைப்பில் பாடபட்டுள்ளன. தலைவன் தலைவியின் சந்திப்பிற்கு வேட்டை வினையினை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதலுடன் வேட்டையம் இணைத்துக் காதலையும் வீரத்தையும் காட்ட பெற்றுள்ளன.