ஆய்வு விளக்கம்
‘தமிழ் இலக்கியத் திறனாய்வின் புதிய போக்குகள்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது இவ்வாய்வு.
1. அமைப்பியல் தொடங்கி தலித்தியம் வரையிலான நவீன அணுகுமுறைகள் வாசகன் மற்றும் வாசிப்பின் தனித்துவம் முதன்மை பெறுவதற்கும், விளிம்பு மக்களது எழுத்துக்கள் பொதுப் பரப்பில் மையம் கொள்வதற்கும், புதிய இலக்கியப் போக்குகள் தோன்றுவதற்கும் பெரும் பங்காற்றியுள்ளது.
2. தமிழ் இலக்கியத்திறனாய்வில் பின்பற்றப்பட்டு வந்த திறனாய்வு முறைகளின் வடிவம், மொழி, உள்ளடக்கம், மதிப்பீடு ஆகியனவற்றை இப்புதிய திறனாய்வுகள் மாற்றியுள்ளன. இலக்கியம் சார்ந்த மாற்றுப் பார்வைகளை வழங்கியுள்ளன.
இவ்வாய்வு நவீனத் திறனாய்வு அணுகுமுறைகள், விளக்கவியல் முறை (அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், பெண்ணியம் தலித்தியம்) அணுகுமுறைகளின் நிகழ்த்தப்பட்ட திறனாய்வுகள் பகுப்பாய்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயலாகப் பகுக்கப்பட்டுள்ளது.
1. திறனாய்வும் தமிழ் இயக்கியச் சூழலும்
2. அமைப்பியலும் பின் அமைப்பியலும்
3. நவீனத்துவமும் பின் நவீனத்துவமும்
4. பெண்ணிய – தலித்தியத் திறனாய்வுகள்
5. நவீனத் திறனாய்வின் புதிய பரிமாணங்கள்
சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ள சில சொற்தொடர்கள் இலக்கியத்தரம், அதன் சமுகப்பயன்பாடு, புதுமை நாட்டம், புலவரின் ஆளுமைத்திறம், நுட்ப முறைகள் போன்றவற்றை வெளிப்படுத்தி, சங்கப்புலவர்களின் திறனாய்வு மனப்பான்மையைக் காட்டுகின்றன. தண்டி முன் வைத்த இலக்கிய அலங்காரங்கள் - செவ்விலக்கிய மரமைப் புதுமைப்படுத்திய பாட்டியல் நூல்கள் முதன்மைப்படுத்திய வகை தொகைப் பாகுபாடுகள், தேர்ந்த தொகுப்பும் பதிப்பும் - நூல் அரங்கேற்றம், புலவர் விவாதமரபு ஆகியன தமிழின் மரபுவழித் திறனாய்வு முறைகளை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.