Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதியார் பல்கலைக்கழகம்
நகரம் கோயம்புத்தூர்
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் ஆ. சரவணன்
நகரம் உதகமண்டலம்
ஆய்வு விவரம்
தலைப்பு பல்லவர் கால பக்தி இலக்கியங்களில் சமயச் சிந்தனைகள்
வகைமை சமயம்
துணை வகைமை பொது
பதிவு நாள் 2006
நெறியாளர் வ. ஆத்ம சோதி
துணை நெறியாளர் வ. ஆத்ம சோதி
ஆய்வு விளக்கம்
முன்னுரை
பல்லவர் காலத்தில் தோன்றிய சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் நம் தமிழ் மக்களுடைய மனப்பான்மைக்கேற்ப அமைந்து சமயச் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ள விதத்ததை ஆராய்வதாய் அமைகிறது.
கருதுகோள்
பக்தி இலக்கியம் தன்னுடைய வலுவான அடிச்சுவட்டை பல நூற்றாண்டு காலம் இலக்கிய உலகில் பதிக்க முடிந்தது என்பது இவ்வாய்வின் கருதுகோள் ஆகும்.
ஆய்வு அணுகுமுறை
விளக்க, பகுப்பு, வரலாற்று, ஒப்பீட்டு, சமூகவியல் ஆய்வு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. சமய இலக்கியங்கள் தோற்றமும் வளர்ச்சியும் 2. பல்லவர் கால சமுதாயச் சூழல் 3. பல்லவர் கால சைவ இலக்கியங்களில் சயமச் சிந்தனைகள் 4. பல்லவர் கால வைணவ இலக்கியங்கிளல் சமயச் சிந்தனைகள் ஆகிய இயல்களைக் கொண்டது.
முடிவுரை
தமிழ்மொழி ‘பக்தியின் மொழி’ என்பது காரணகணியத் தொடர்போடு சுட்டப்படுகிறது. சமயங்களின்றி, தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிஇல்லை என்னும் அளவிற்கு சமயங்கள் தமிழ் இலக்கியங்களில் ஊடுருவி நிற்பது கோடிட்டுக்காட்டப்படுகிறது. இயற்கை நெறியில் வாழ்ந்த தமிழ் மக்களைத் தம்முடைய அறநூல் மூலமாக சமய நெறிக்கும், தத்துவ நெறிக்கும் வழி நடத்தித் தமிழகத்தில் சமயங்களும், தத்துவங்களும் தோன்ற அடிப்படையாய் அமைந்த பெருமை, திருக்குறளையே சாரும் என்பது புலப்படுத்தப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்து ‘இந்திர வழிபாடு’ காலம் செல்லச்செல்ல அருகி மறைந்துபோன தன்மை நினைவுப்படுத்தப்படுகிறது. வைணவத் தத்துவங்களில், ‘சரணாகதி த்ததுவம்’ முதன்மையானது என்பது வெளிப்படுத்தப்படுகிறது. பல்லவர்களின் ஆட்சிக்காலச் சூழலில் தமிழகம், மனித மைய ஈர்ப்பு சூழலுக்கு மாறிக்கொண்டிருந்த தன்மை புலப்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் இடம் பெற்ற சமயங்கள் - குறிப்பாக சைவ, வைணவ, சமண, பௌத்த சமயங்கள் - தங்கள், தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ள சமயப் போராட்டங்களில் ஈடுபட்டமையை பக்தி இலக்கியங்களின் மூலம் வெளிப்படையாக உணர முடிகிறது.