Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதியார் பல்கலைக்கழகம்
நகரம் கோயம்புத்தூர்
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் த. அருள் ஜோதி
நகரம் கோபிசெட்டிப்பாளையம்
ஆய்வு விவரம்
தலைப்பு கொங்குக் குறவஞ்சி இலக்கியங்கள் காட்டும் சமுதாயப் பண்பாட்டுக் கூறுகள்
வகைமை சிற்றிலக்கியங்கள்
துணை வகைமை குறவஞ்சி
பதிவு நாள் 2010
நெறியாளர் கு. மகுடீஸ்வரன்
துணை நெறியாளர் கு. மகுடீஸ்வரன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
பழனி. மருதமலை எனப் பல மலைகளின்ல முருக வழிபாடு மிகுந்துள்ளது. ஆகவே இப்பகுதியில் குறிவஞ்சி இலக்கியம் எழுதல் இயல்பே. மற்றப் பகுதியில் பாடப்பெற்ற குறவஞ்சியிலிருந்து சில வேறுபாடுகளுடன் கொங்குக்குறவஞ்சிகள் அமைந்துள்ளன. அவ்வாறன கொங்குக் குறவஞ்சிகளைப் பற்றியே இந்த ஆய்வு அமைகின்றது.
ஆய்வு அணுகுமுறை
பகுப்பாய்வு, வரலாற்றியல் அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
கருதுகோள்
இல்லை
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. கொங்கில் குறவஞ்சி – தோற்றமும், வளர்ச்சியும் 2. கொங்கில் குறவஞ்சி – அமைப்பும், சிறப்பும் 3. கொங்கில் குறவஞ்சி – வரலாறும், வள்ளல்களும் 4. கொங்குக் குறவஞ்சி – சமூகமும், பண்பாடும் 5. கொங்குக் குறவஞ்சியில் சைவ சித்தாத்தத்தாக்கம் ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது.
முடிவுரை
கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ‘குறவஞ்சி’ இலக்கியங்கள் முழுவடிவம் பெற்று 18.19 ஆம் நூற்றாண்டுகளில் பெருகி வளர்ந்தன. கொங்கு நாட்டின் இயற்கை அமைப்பு, புலவர்கள் பெற்ற மரியாதை ஆகியன சிற்றிலக்கியங்கள் பெருகித் தோன்ற வழிவகுத்தன. கொங்கு குறவஞ்சிகளில் எழிலான தலைவி, குறத்தி. தோழி பவனிகாணும் பெண்கள், சிங்கன், குறவன் என பாமர மக்களைக் கொண்டும் பாடப்பட்டுள்ளன. உவமை, உருவகம், பிற அணிநலன்கள், சிலேடை, மடக்கு வருணனை பாரநூல் மேற்கோள், சொல் நயம், பொருள் நயம், சந்த இனிமை, வசனம், வரலாறு ஆகிய அனைத்தையும் குறவஞ்சி நூல்களில் புலவர்கள் கையாண்டுள்ளனர். குறவஞ்சிகளில் நாட்டுப்புற மக்களின் கூத்து, பேச்சு, பழக்கவழக்கம், பழமொழிகள், சடங்குகள், மரபுகள், பண்புகள், மந்திரம், தந்திரம், மாயவித்தை போன்றவை இடம் பெற்று குறவஞ்சி நாட்டுப்புற மக்கள் இலக்கியமாகவே விளங்குகிறது. சங்ககாலக் குறிகூறும் முறையை விரிவாக்கி எழுந்த குறவஞ்சி இலக்கியத்திற்கு பாட்டியல் நூல்கள் நூற்பாக்களின் அமைப்பு முறைகளை எடுத்துரைத்தன. குறம், குறவ நாடகம் ஆகியவற்றின் அமைப்பும் அவற்றை உட்கொண்டுள்ள குறவஞ்சியின் அமைப்பும், கொங்குக் குறவஞ்சிகளில் பொதுவான சிறப்பான அமைப்புகளும் எடுத்துரைக்கப்பட்டன. கட்டியங்காரன், தலைவன், தலைவி, குறத்தி, குறவன் நூலின் ஆசிரியர் பற்றியும் ஆராயப்பட்டுள்ளன. கொங்கு குறவஞ்சி பாடியவாகளுள் பெண்பால் புலவரான பூங்கோதையும் ஒருவராவர் அவர் எம்பெருமான் கவிராயருடைய மனைவி. சிவன் மலைக் குறவஞ்சி பாடிய இலக்குமன பாரதி பவானி, பாலபாரதி ஆகியோர் பிராமன் வகுப்பைச் சார்ந்தவர்கள். இவர்கள் இது தவிர பல நூல்களையும் பாடியுள்ளனர். அர்த்தநாரீசுவரர், முருகன் போன்ற தெய்வங்கள் பாட்டுடைத் தலைவர்களாக இரு குறவஞ்சிகளில் அமைகின்றன.