Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் சென்னைப் பல்கலைக்கழகம்
நகரம் சென்னை
மாவட்டம் தமிழ் நாடு
அஞ்சல் குறியீட்டு எண் 6000005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் மு. கலீல் அகமது
நகரம்
ஆய்வு விவரம்
தலைப்பு இறையருட் கவிமணி கா. அப்துல் கபூரின் இலக்கியப் பங்களிப்பு – ஓர் ஆய்வு
வகைமை பங்கும் பணியும்
துணை வகைமை தனிஆள்ஆய்வு
பதிவு நாள் 2020
நெறியாளர் சே. சாகுல் அமீது
துணை நெறியாளர் சே. சாகுல் அமீது
ஆய்வு விளக்கம்
முன்னுரை
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பெருமக்கள் பலர். அந்த வகையில் பல சமயத்தவரும் தமிழ்மொழிக்குப் பங்காற்றியுள்ளனர். இன்பத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்களும் இணையற்ற பங்காற்றியுள்ளனர். வழியும் மொழியும் வாழ்வின் விழிகள் என்னும் இலக்குடன் இருபதாம் நூற்றாண்டில் இலங்கும் இஸ்லாமியத் தமிழறிஞர் நடுவண் தலைமணியாகத் திகழ்பவர் இறையருட் கவிமணி பேராசிரியா கா.அப்துல் கபூர். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்மொழிக்குக் குறிப்பாக இஸ்லாமியத் தமிழுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருப்பவர். குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் தமிழ்ப் பணி ஆற்றியிருக்கிற பல்வகை இறையருட்கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களின் பல்வகை இலக்கிய பங்களிப்பை எடுத்துக் காட்டுவதாக இவ்வாய்வு அமைகிறது.
ஆய்வு அணுகுமுறை
இல்லை
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. அவை, 1. இறையருட் கவிமணியின் வாழ்வும் பணியும் 2. இறையருட் கவிமணியின் மாலை இலக்கியங்கள் 3. இறையருட் கவிமணியின் பிற கவிதை இலக்கியங்கள் அ. தனிப்பாடல்கள் ஆ. குழந்தைப் பாடல்கள் இ. கவியரங்கக் கவிதைகள் 4. இறைவருட் கவிமணி இயற்றிய உரைநடை நூல்கள் அ. பொதுவான நூல்கள் ஆ. இஸ்லாமிய நூல்கள் 5. இறையருட் கவிமணியின் இலக்கிய வளம் என்பனவாகும்.
முடிவுரை
இறையருட் கவிமணி அவர்கள் கல்வியாளராகப், பேராசிரியராகக் , கவிஞராக, உரைநடையாசிரியராக, இதழாளராகச், சொற்பொழிவாளராக அமைந்து தமிழுக்குப் பங்காற்றியுள்ளார். இப்படிப் பன்முகத்தன்மை கொண்ட பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் “அழகு தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” எனப் போற்றி இருப்பது மிகப் பொருத்தமானதாகும். இவரைத் தொடர்ந்தே மு.வ., தெ.பொ.மீ., வ.சுப.மா., பொற்கோ ஆகியோர் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பொறுப்பு வகித்தனர். இவருடைய தனிப்பாடல்கள் வாழ்த்துப்பாக்களாகவும், இஸ்லாம் மார்க்க நெறிப் பாக்களாகவும், கவியரங்கக் கவிதைகளாகவும் அமைந்துள்ளன. திருக்குர்ஆன் தமிழாக்கத்தைக் கவிதையாக்கித் தந்த சிறப்பு முயற்சியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தலைசிறந்த இஸ்லாமியக் குழந்தை எழுத்தாளராக மலர்ந்ததையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அரும் பூ என்னும் குழந்தைப் பாடல் தொகுப்பு குழந்தை இலக்கிய உத்திகளைத் திறமையாகக் கையாண்ட ஆக்கமாக அமைந்துள்ளது. இத்தொகுதியில் குழந்தைகளுக்கும் மொழி உணர்வையும் இறை உணர்வையும் ஊட்டுகின்றார். இறையருட் கவிமணி கா. அப்துல் கபூரின் எல்லாப் படைப்புகளிலும் எதுமையும் மோனையும் இடம் பெறுகின்றன. இலக்கணப் புலமையம் இலக்கிய வளமையும் தமிழாற்றலும் பெற்ற படைப்பாளியாக இறையருட் கவிமணியைக் காணமுடிகின்றது. இவ்வாய்வில் கண்டறிந்துள்ள முடிவுகளின் மூலம், வழியும் மொழியும் வாழ்வின் விழிகள் என்ற இலட்சிய நோக்கோடு அறநெறி உணர்வும் அருள்நெறி உணர்வும் மேலோங்கி நிற்கும் வகையில் தமிழுணர்வோடு படைப்புகளைத் தந்துள்ள இறையருட் கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர் தமிழ் இலக்கியத்திற்குத் தகுதியும், பயனும் மிகுந்த தனிச்சிறப்புக் கொண்ட பங்களிப்பை செய்துள்ளார் என்றே மதிப்பிட முடிகின்றது.