Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் கோ. தங்கச் செல்வி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் (மதுரை மாவட்டம்).
வகைமை நாட்டுப்புறவியல்
துணை வகைமை தெய்வங்கள்
பதிவு நாள் 2006
நெறியாளர் வீ. அய்யனார்
துணை நெறியாளர் வீ. அய்யனார்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் (மதுரை மாவட்டம்) என்னும் ஆய்வுத் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வின் கருதுகோள்:-
தாய்மையைக் கடவுள் தன்மையாகவும், பெண்மையைத் தெய்வீகமாகவும் கருதும், சமுதாயத்திலேயே தாய்த்தெய்வ வழிபாட்டின் தோற்றமும், பெண் தெய்வங்களின் வளர்ச்சிப் பெருக்கமும் தோன்றமுடியும். வேளாண்மை நாகரிகத்தில் உதித்த தாய்வழி உரிமையும், தாய்த்தெய்வ வழிபாடும் மழைவளம், வேளாண்மையின் செழிப்பு பெண்களின் வளமை, குழந்தைகளின் நலம் ஆகியவற்றை நோக்கியே வளரும். வீரத்திற்கும் வெற்றிக்கும் அடிப்படையாகக் கருதப்பட்ட தாய்த்தெய்வ வழிபாடே பிற்காலத்தில் வன்மையான வேண்டுதல்களுக்குரிய விதையாக அமைகிறது. பெண்மையின் பல்வேறு பண்பு முகங்கள் உணரப்பட்ட காலத்தில்தான் எண்ணற்ற பல்வகையான பெண் தெய்வங்கள் எழுச்சி பெற்றிருக்கமுடியும். பெருந்தெய்வங்களின் வழிபாட்டுச் சடங்குகளிலிருந்து கிராமியப் பெண்தெய்வங்கள் அல்லது சிறு தேவதைகளின் வழிபாடுகள் பெரிதும் வேறுபட்டிருப்பதும், அவை தனித்தன்மை உடையனவாகத் தோற்றமளிப்பதும் நாட்டுப்புறங்களிலிருந்தே தாய்த்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும், தோன்றியுள்ளன என்பதற்கு ஆதாரம் ஆகின்றன. இந்நிலைப் பாட்டினால் நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் மேன்மேலும் பல்கிப் பெருகிவளர்வனவே அன்றி சுருங்கி மறைவான அல்ல என்பது வெளிப்படுகிறது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு, வரலாற்று அணுகுமுறை, சமூகப் பண்பாட்டியல் அணுகுமுறை, பகுப்பாய்வு அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை கலைநுணுக்கவியல் அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு 1. முன்னுரை 2. பெண் தெய்வ வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் 3. பெண் தெய்வங்களும் - வகைப்பாடுகளும் 4. பெண் தெய்வ வழிபாட்டு முறைகள் 5. நேர்த்திக் கடன்களும், நம்பிக்கைகளும் 6. திருவிழாக்களும், நிகழ்த்துகலைகளும் 7. முடிவுரை ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது.
முடிவுரை:-
இயல்களின் வாயிலாக இவ்வாய்வாளரால் கண்டறியப்பட்ட முடிவுகள் யாவும் முடிவுரையில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.