ஆய்வு விளக்கம்
‘இரட்சணிய யாத்திரிகத்தில் காப்பியக் கொள்கைகள்’ என்பது ஆய்வுத் தலைப்பாகும்.
கிருஷ்ணபிள்ளை தமிழ்காப்பிய மரபுகளைப் பின்பற்றி விவிலியக் கருத்துக்களுக்குக் கொள்கை விளக்கமாக இரட்சணிய யாத்திரிகத்தைப் படைத்தார் என்பதை இவ்வாய்வு கருதுகோளாகக் கருதுகின்றது.
இவ்வாய்வில் விளக்கவியல் அணுகுமுறையும், மதிப்பீட்டியல் அணுகுமுறையும், பகுப்பாய்வு அணுகுமுறையும், ஒப்பாய்வு அணுகுமுறையும் பின்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டுள்ளது.
1. எச். ஏ. கிருஷ்ணபிள்ளையின் வாழ்வும் எழுத்தும்
2. காப்பியக் கொள்கைகளும் தமிழ்க் காப்பியங்களும்
3. இரட்சணிய யாத்திரிகம் - காப்பிய அமைப்பு
4. இரட்சணிய யாத்திரிகத்தில் பாத்திரப் படைப்பு
5. இரட்சணிய யாத்திரிகத்தில் காப்பிய உத்திகள்
6. இரட்சணிய யாத்திரிகத்தில் இறையியற் கொள்கைள்
இரட்சனிய யாத்திரகன் மூலநூல் போன்று சிறப்புற அமைவதற்குக் கிருஷ்ணபிள்ளையின் புலமைத்திறன் உறுதுணையாக இருந்தது. மேலை இலக்கிய தமிழ் இலக்கிய மரபுகளை உணர்ந்து தமிழ்மரபுக்கு ஏற்ற காப்பியக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது. ஓசை நயத்திலும் விருத்தப்பாக்களின் வேறுபட்ட அமைப்பியலும் கிருஷ்ணபிள்ளை, கம்பரை நினைவூட்டுகிறார். காப்பிய உத்தி முறைகளாலும், இலக்கிய நயத்தாலும், காலத்தை வென்று நிற்கும் அற்புதக் காப்பியம் இரட்சணிய யாத்திரிகம் கிறித்தவ இறைவியல் கருத்தக்களைப் பரப்பும் காப்பியமாக இது திகழ்கிறது. இக்காப்பியத்தின் சீர்மையை விளக்கும் இந்த ஆய்வு ஒரு பயனுள்ள முயற்சி எனலாம்.