Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
நகரம் தஞ்சாவூர்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 613 005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் இரா. இராசலட்சுமி
நகரம் தஞ்சாவூர்
ஆய்வு விவரம்
தலைப்பு நாட்டுப்புறப் பாடல்களில் சடங்குப் பாடல்கள் (பாபநாசம் வட்டம்)
வகைமை நாட்டுப்புறவியல்
துணை வகைமை வழக்காறுகள்
பதிவு நாள் 2008
நெறியாளர் க. சாந்தி
துணை நெறியாளர் க. சாந்தி
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் பல சடங்குகள் நடத்தப் பெற்று அவற்றின் பல சடங்குப்பாடல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அச்சடங்குப்பாடல்களை ஆராயும் வண்ணம் இவ்வாய்வு அமைகிறது.
கருதுகோள்:-
சடங்குகள் நடைபெறும்போது பாடப்பெறும் பாடல்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. அறிவியல் முன்னேற்றம், கல்வி போன்ற காரணங்கள் ஒரு சில கருத்துக்களைப் பாடலில் இடம்பெறச் செய்துள்ளன. சில பாடல்களில் ஆங்கிலச் சொற்களும், வடமொழிச் சொற்களும் ஆங்காங்கே இடம் பெறுகின்றன போன்ற கருதுகோள்கள் இந்த ஆய்வின் மூலம் நிரூபனமாகின்றன.
அணுகுமுறை:-
இந்த ஆய்வின் பெரும்பாலும் விளக்கமுறை ஆய்வு கையாளப்பட்டுள்ளது. ஆங்காங்கே சமூகவியல் ஆய்வும் பின்பற்றப்பட்டுள்ளது.
ஆய்வுப் பகுப்பு:-
இயல் 1. சடங்குகள் - சடங்குப்பாடல்கள் ஓர் பார்வை இயல் 2. வாழ்க்கை வட்டச் சடங்குப் பாடல்கள் இயல் 3. வளமைச் சடங்குப் பாடல்கள் இயல் 4. வழிபாட்டுச் சடங்கு பாடல்கள் இயல் 5. பிற சடங்குப் பாடல்கள்
முடிவுரை:-
சடங்குகள், சடங்குப் பாடல்கள் ஓர் பார்வை எனும் இயலில் பழக்கம் வழக்கம் பற்றிய விளக்கங்கள், சடங்குகள் பற்றிய விளக்கங்களும் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களும் விளக்கப்பட்டுள்ளன. சடங்குகளின் வகைகளும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் சடங்குப்பாடல்களின் விளக்கங்களும் வரையறைகளும் வகைகளும் பற்றிக் கூறப்பட்டுள்ளன. வளமைச் சடங்குப்பாடல்கள் எனும் இயலில் வளமைக் சடங்குப்பாடல்கள் பற்றிய விளக்கங்களும் இதர வளமைச் சடங்குகள் என்ற தலைப்பில் சில சடங்குகளும் அவற்றிற்கான சடங்குப் பாடல்களும் விலக்கப்பட்டள்ளன. சடங்குப் பாடல்கள் இதற்கு முந்தைய காலத்தைவிட குறைந்துள்ளது என்பது உணரமுடிகிறது. மக்கள் தாங்கள் பாடும் பாடல்கள் மிகச் சரியானவை அல்ல, அதில் மறதி, தவறுகள் இருக்கும் என எண்ணுவதும் தெரிகிறது.