Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
நகரம் தஞ்சாவூர்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 613 005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் ஜெ. சியாமளா
நகரம் புதுச்சேரி
ஆய்வு விவரம்
தலைப்பு புறநானூற்றில் மெய்ப்பாடு
வகைமை சங்க இலக்கியம்
துணை வகைமை எட்டுத்தொகை
பதிவு நாள் 2009
நெறியாளர் நா. செல்வராசு
துணை நெறியாளர் நா. செல்வராசு
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
தொல்காப்பியர் வகுத்தளித்த இலக்கியப் படைப்பாக்க உத்திகளைப் புறநானூற்றில் பொருத்திப் பார்க்கும் முயற்சியும் அவற்றுள் ஒன்று. மெய்ப்பாட்டியல் குறித்த தொல்காப்பியரின் கோட்பாடுகளை உள்வாங்கி அவை புறநானூற்றுப் பாடல்களில் எவ்வாறு பயின்று வருகின்றன என்பதை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை அணுகுமுறை, ஒப்பீட்டியல், சமூகவியல், அறிவியல் நெறிகள் பின்பற்றப்பட்டுள்ளன.
இயல் அமைப்பு:-
முன்னுரை, முடிவுரை நீங்கலாக நான்கு இயல் இயல் 1. மெய்ப்பாட்டியல் கோட்பாடுகள் இயல் 2. புறநானூற்றில் மெய்ப்பாடுகள் இயல் 3. புறநானூற்றில் மெய்ப்பாடுகள் : சமூகவியல் ஆய்வு இயல் 4. புறநானூற்றில் பண்பாட்டு மெய்ப்பாடுகள்
கருதுகோள்:-
இல்லை
முடிவுரை:-
தொல்காப்பியர் எண்வகை மெய்ப்பாடுகள் அவற்றின் விரிவுகள் இவற்றை மெய்ப்பாட்டியலில் விளக்கச் சொல்கிறார் எண்வமை மெய்ப்பாடுகள் நீங்கலாகப் பிற மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் கூறினாலும் அவற்றை எண்வகை மெய்பாடுகளுக்குள்ளேயே அடக்கிவிட முடியும் என்பது ஆய்;வாளர் கருத்து. தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் உரைகளிலும் நம்பியக்கப் பொருள் நீங்கலாகப் பிற இலக்கண நூல்களிலம் இரசக் கோட்பாட்டின் தாக்கம் காணப்படுகிறது. தமிழுக்கு நிகரான செவ்வியல் தன்மை கொண்ட கிரேக்க உரோமாணிய மொழிகளில் அவல மெய்ப்பாட்டிற்கு முதன்மைதரப்பட்டது. இனக்குழுக் காலத்திய பெருமிதக் களங்கள் வேறாகவும் பேரரசுக் காலத்துப் பொருமிதக் களங்கள் வேறாகவும் அமைகின்றன. புறநானூற்றில் இடம்பெறும் அணங்கு, புதல்வர் ஆகிய சொற்களையும் கழிகல மகளீர் என்ற தொடரையும் பண்பாட்டு மெய்ப்பாட்டியல் அடியாக அணுகி ஆய்வு மேற்கொள்ளப்பெற்றது. அணங்கு என்னும் சொல் மருட்கை அல்லது அச்ச மெய்ப்பாட்டை உணர்த்துகின்றது. புதல்வன் என்னும் சொல் பெருமித மெய்ப்பாட்டை உணர்த்துகிறது. தமிழக மகளீர் என்னும் தொடர் அழுகை மெய்ப்பாட்டினையும் உணர்த்துகின்றது.