Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
நகரம் தஞ்சாவூர்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 613 005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் கு. சிவமணி
நகரம் புதுச்சேரி
ஆய்வு விவரம்
தலைப்பு பாரதியாரின் குயில்பாட்டுநுண்ணாய்வும் மெய்ப்பொருள் விளக்கமும்
வகைமை இக்காலஇலக்கியங்கள்
துணை வகைமை கவிதை
பதிவு நாள் 2005
நெறியாளர் மு. சுதர்சன்
துணை நெறியாளர் மு. சுதர்சன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
பாரதியார் கதைபொதிபாட்;டாகக் குயில்பாட்டைப் பாடுவதுடன் அமைகின்றார். ஆனால் பாட்டுள்ளே பொதிந்திருக்கும் உயிர்நிலையாகிய மெய்ப்பொருளை உய்த்துணர்ந்த வெளிப்படுத்துவது அதனை ஆழ்ந்து கற்பவரின் கடமையாகின்றது. அக்கடமையை இவ்வாய்வேடு மேறகொண்டிருக்கிறது.
அணுகுமுறை:-
வரலாற்றுமுறைத் திறனாய்வு, உள்ளத்தியல்முறை திறனாய்வு விளக்கமுறைத் திறனாய்வும் இவ்வாய்வின் அணுகுமுறைகளாக அமைகின்றன. மேலும் குயில்பாட்டின் நலம் பாராட்டும் முறைத் திறனாய்வும் (மேலைக் கவிஞர்களின்) ஒப்பீட்டுமுறைத் திறனாய்வும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆய்வுப் பகுப்பு:-
முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டது. 1. குயில் பாட்டு – பொது மதிப்பீடு 2. குயில் பாட்டு – ஆய்வுகள் இதுவரை 3. குயில் பாட்டு – ஆய்வுகள் பற்றிய ஆய்வு 4. குயில் பாட்டு – பாரதியாரின் உட்கருத்து 5. குயில் பாட்டு – மெய்பொருள் விளக்கம்
கருதுகோள்:-
இல்லை
முடிவுரை:-
பாரதியாரின் முப்பத்தொண்பது வயது வாழ்க்கையை ஏழு காலப்பகுதியில் இடம்பெறுகின்றன. பாரதியார் வேத மரபுக்கும் சித்தர் நெறிக்கும் பொதுமை காண விழைந்தாள் என்பதும், அதற்கு முரணாக வேத மரபுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்பதும் புலப்படுகின்றன. பாரதியாரின் ஆன்மத் தேடலின் விளைந்த ஞானத் தெளிவின் வெளிப்பாடே குயில்பாட்டு. பாரதியாரின் நூற்றாண்டுவிழா (1982) அவரை உலகக் கவியாக வலம்வரச் செய்தது. பாரதியாரின் பதினோரு நூல்களைத் தாமே சொந்தமாக வெளியிட்டுள்ளர். குயில்பாட்டு மேலைக் கவிதைகளுடைய தாக்கத்தின் விளைவு எனக் கூறுவாரின் கருத்து மேலும் ஆராய்வதற்குரியது. இந்திய மரபுவழித் தத்துவத்தின் தாக்கமே குயில்பாட்டுக்கு அடிப்படை ஆகிறது. பாரதியார் வேதம் புதுவை செய்ய விழைந்த காலத்தில் தான் குயில்பாட்டு உருவாயிற்று அவர் கண்டு தெளிந்த உண்மையை அப்பாட்டின் இறுதியில் “வேதாந்தம்” என்னும் ஞான முத்திரையைப் பதித்துள்ளார்.