Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
நகரம் தஞ்சாவூர்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 613 005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் ஜெ. தேவி
நகரம் தஞ்சாவூர்
ஆய்வு விவரம்
தலைப்பு சுபமங்களாவின் இலக்கிய பங்களிப்பு
வகைமை இதழியல்
துணை வகைமை தனிஇதழ்
பதிவு நாள் 2007
நெறியாளர் து. சீனிச்சாமி
துணை நெறியாளர் து. சீனிச்சாமி
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில்(1991)ல் தோன்றிய ‘சுபமங்களா’ கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு இலக்கிய வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இவ்விதழ் தமிழ் இதழ்களின் வணிகப்பெருநோக்கிலிருந்து பெரிதும் வேறுபட்டு அமைவது சுபமங்களா தன் ஏடுகளில் தமிழ் நவீனத்துவப் போக்குகளைக் கூர்மைப்படுத்தியுள்ளது. இவ்வாறு நவீனத்துவத்திற்காக கருத்துக்களையும் இடதுசாரிப் பார்வையுடன் பல்வேறு விவாதங்களையும் பல்வேறு இலக்கிய வடிவங்களுடன் ‘சுபமங்களா’ இதழ் முன்வைத்தன.
ஆய்வேட்டின் அமைப்பு:-
1. இலக்கிய இதழ் வரலாற்றில் சுபமங்களாவின் காலம் 2. படைப்பாக்கங்கள் : அடிக்கருத்துக்கள் 3. படைப்பாக்கங்கள் : கலை மதிப்புகள் 4. திறனாய்வுக் கோட்பாடுகள் 5. முக்கிய இலக்கிய வல்லுநர்களின் பன்முகப் பங்களிப்பு
முடிவுரை:-
இலக்கிய இதழ் வரலாற்றில் சுபமங்களா காலம் என்ற முதல் இயலின் இலக்கிய வரலாற்றினை அறிவதற்கான தகவல் தொடர்பினைப் பற்றியும் அத்தொடர்பின் தோற்றம் அதன் மரபுவழித் தன்மை அவற்றின் வகைகளாக அகத்தொடர்பு புறந்தொடர்பு எனவும் அத்தொடர்பின் வெளிப்பாட்டு நிலையாகச் சொல்வழித் தொடர்பு என்ற நிலையில் ஆராயப்பட்டது. மனிதன் பற்றியும் நடிப்பு, வறுமை, கவலை, தன்னம்பிக்கை இழக்கும் நட்பு, பொருன்மை, தீவரவாதம், வாக்காளரின் அவல நிலை, சலனம், வரதட்சனை சிறிய மனம் போன்ற அடிக்கருத்துக்கள் ஆராயப்பட்டன. கட்டுரைகளில் பொதுவரலாறு, சமூகவரலாறு கலைவரலாறு இவற்றின் அடிப்படையில் அடிக்கருத்துக்கள் ஆராயப்பட்டன. சிறுகதை பற்றிய திறனாய்வும், நாவல் பற்றிய திறனாய்வும், கவிதைப் பற்றிய திறனாய்வும் படைப்பு, பற்றிய திறனாய்வும், கட்டுரை பற்றிய திறனாய்வும், காலச்சுவடு சிறப்பிதழ் குறித்த திறனாய்வும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.