Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
நகரம் தஞ்சாவூர்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 613 005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் த. இராஜா
நகரம் தஞ்சாவூர்
ஆய்வு விவரம்
தலைப்பு தமிழ் வினையடிகளின் வரலாற்று மொழியியல் ஆய்வு
வகைமை மொழியியல்
துணை வகைமை வினைச்சொற்கள்
பதிவு நாள் 2008
நெறியாளர் ச. இராசேந்திரன்
துணை நெறியாளர் ச. இராசேந்திரன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
இலக்கணம், இலக்கியம், கல்வேட்டு, செப்பேடுகள் பிறநாட்டார் குறிப்புகள் போன்றவற்றின் மூலம் தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். வரலாற்று அறிஞர்கள் குறிப்பாகத் தமிழ்புலவர்களால் திரட்டப்பட்ட பழந்தழிழ் நூல்கள் தமிழ் மொழியின் வரலாற்று மாற்றத்தை உணர்த்தி நிற்கின்றன. கால ஓட்டத்தில் தமிழ் மொழியமைப்பின் மாற்றத்தை, குறிப்பாக வினைச் சொற்களின் மாற்றத்தை ஆய்வது செம்மொழியின் சிறப்புக்கூறுகளை அறிய உதவும்.
கருதுகோள்:-
தமிழ் மொழி வினையடிகளில் ஓலியனியல் நிலையிலும் உருபனியல் நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அம்மாற்றங்களைப் பழந்தமிழ், இடைக்காலத்தமிழ் தற்காலத்துத்தமிழ் என்ற மூன்று காலக்கட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகப் பகுத்துக் காணவியலும் என்பது இவ்வாய்வின் கருதுகோளாகும்.
ஆய்வு நெறிமுறை:-
வினயைடிகளில் கால அடிப்படையிலான மாற்றத்தை வெளிப்படுத்தும் ஆய்வாதலால் வரலாற்று மொழியியலின் நெறிமுறை இங்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வு பகுப்பு:-
இயல் 1. அறிமுகம் இயல் 2. தமிழ் மரபிலக்கணங்களில் வினையடிகள் இயல் 3. தமிழ் வினையடிகள் பற்றிய முந்தைய ஆய்வுகள் இயல் 4. தமிழ் வினையடிகளின் வரலாற்று மொழியியல் ஆய்வு இயல் 5. வினையடிகளின் தொற்பிறப்பியல் இயல் 6. முடிவுரை
முடிவுரை:-
தமிழ் வினையடிகளை வரலாற்று மொழியியல் அடிப்படையில் முழுவதுமாக ஆராய்ந்து ஆய்வுக் கண்டுப்பிடிப்புகளைத் தமிழில் தரும் ஆய்வேடாக இது விளங்குகின்றது எனக் கூறலாம். செம்மொழியாக விளங்கும் தமிழின் தொன்மையை அறிதியிட்டு வெளிப்படுத்துவது விளையடிகளேயாகும். தமிழமைப்பில் சொல்லியல் நிலையில் ஏற்பட்டுள்ள கால அடிப்படை மாற்றங்களை வெளிப்படுத்தும் இவ்வாய்வு ஒரு தொடக்கமாக அமைந்து வரலாற்றுமொழியில் மாணவர்களையும் ஆய்வாளர்களையும் ஆற்றுப்படுத்த துனைபுரியும். செயல்பாடுபொருள், குன்றியவினை, குன்றாவினை மற்றும் தனிவினை, பிறவினை, அமைப்புகள் பற்றியும் குன்றியவினைகள் ‘சகன்மம்’ என்றும் குன்றாவினைகளை ‘அகன்மம்’ என்றும் பிரேயாகவிவேகம் குறிப்பிடுகின்றது.