ஆய்வு விளக்கம்
“தமிழ் இதழியல் வளர்ச்சியில் மின் - இதழ்கள்” என்பது இவ்வாய்வின் தலைப்பாகும்.
தமிழ் இலக்கிய மரபோடும் நவீன இலக்கியப் போக்குகளோடும் தொடர்புள்ள ஒருவர் தன்னுடைய படைப்பாற்றலைச் சோதித்துப் பார்க்க இணையம் ஒரு சிறந்த ஊடகம் எனலாம். அச்சு ஊடகங்களின் வரையறைகள் தணிக்கைகள் ஆகியவை இல்லாத இணையத்தில் எழுதும் சாத்தியம் ஒரு படைப்பாளிக்கு மனோரீதியான விடுதலையைக் கொடுக்கிறது எனத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் மின் இதழ்கள் வாசகர்களின் சாத்தியங்களை எல்லையற்றதாக்குகிறது எனக் கருதுகின்றனர்.மின் இலக்கிய இதழ்களின் பயன் மின்செய்தி இதழ்கள் செய்திகளைத் தருவதிலும் வடிவமைப்பதிலும் புரட்சிகரமான முயற்சிகளைச் செய்துவருகின்றன. இவற்றை அளவீட்டு ‘மின் இதழ்கள் தம்முடைய வளர்ச்சியோடு தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக்கும் துணை நிற்கின்றன எனும் கருத்துரு இவ்வாய்வின் கருதுகோளாக அமைகிறது.
இவ்வாய்வு வரலாற்று முறை, விளக்கமுறை, தொகுப்பு முறை மற்றும் பகுப்புமுறை, ஒப்பீட்டுமுறை ஆகிய அணுகுமுறைகளுடன் அமைகின்றது.
முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயலாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அவை,
1. தமிழில் மின் இதழ்களின் தோற்றம்
2. மின் இதழ்களின் உருவமும் உள்ளடக்கமும்
3. மின் இதழ்களின் வகைகள்
4. மின் இதழ்களின் விளைவுகள்
5. மின்னணுக் கருவிகளின் வரலாறும் வளர்ச்சியும்
என்பனவாகும்.
1. மின்னணுத் தகவல் தொடர்பில் அறிவியல் வளர்ச்சியின் பயனாக மின் இதழ்கள் தோற்றம் பெற்றுள்ளன.
2. மின் இதழ்கள் செய்தித்தளங்களாகவும் பல்சுவைத் தளங்களாகவும் தகவல் தளங்களாகவும் விளங்குகின்றன.
3. மின் இதழ்கள் ஒழுங்குறி எழுத்திலும் இணையடிவ எழுத்திலும் வெளியாகின்றன. ஒருங்குறி எழுத்தில் மின் இதழ்களைப் படிப்பதற்கு எளிதாக உள்ளது மின்இதழ் வளர்ச்சிக்கு இணைய வடிவ எழுத்துக்கள் தடையாக உள்ளன.
4. மின் இதழ்களாக இலக்கிய இதழ்களும், நாளிதழ்களும், குறிக்கோள் இதழ்களும் வெளிவருகின்றன.
5. அச்சிதழ்கள் பக்க அமைப்பும், வடிவ அமைப்பும், செய்தி வெளிப்பாடும் வாசகரின் உளவியலை மனதில் கொண்டு அமைக்கப்படுகின்றன என்பதற்கு இது நல்லதொரு சான்றாகும். தங்களுடைய அடையாளத்தை மின் இதழின் வடிவமைப்பில் நிலை நிறுத்திக் கொள்ள நாழிதழ்கள் நாட்டம் கொள்வதில்லை என்பதையும் இது காட்டுகிறது.