Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நகரம் திருச்சி
மாவட்டம் தமிழ் நாடு
அஞ்சல் குறியீட்டு எண் 620024
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் இரா. ஜெயஸ்ரீ
நகரம் தஞ்சாவூர்
ஆய்வு விவரம்
தலைப்பு உளவியல் நோக்கில் மெய்ப்பாட்டியல்
வகைமை இலக்கணம்
துணை வகைமை பொருள்
பதிவு நாள் 2010
நெறியாளர் இராம. சிதம்பரம்
துணை நெறியாளர் இராம. சிதம்பரம்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
“உளவியல் நோக்கில் மெய்ப்பாட்டியல்” என்பது ஆய்வுத் தலைப்பாகும்.
கருதுகோள்
தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் முழுவதிலும் உளவியல் கருத்துகள் விரவிக்கிடக்கின்றன என்பது இவ்வாய்வின் கருதுகோளாககட கொள்ளப் பெறுகிறது.
ஆய்வு அணுகுமுறை
இவ்வாய்வில் உளவியல் அணுகுமுறையும், விளக்கவியல் அணுகுமுறையாக அமைந்துள்ளது.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. அவை, 1. உளவியல், மெய்ப்பாட்டியல் - ஓர் அறிமுகம் 2. அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் 3. பிற இலக்கியங்களில் உளவியல் 4. மெய்ப்பாட்டியல் உணர்த்தும் உளவியல் கூறுகள் 5. மெய்ப்பாட்டியலும் மேடை உலகமும் என்பனவாகும்.
முடிவுரை
குடும்ப அமைப்பு என்பது காலங்காலமாக இருந்துவரும் மரபுசார்ந்த மனப்போக்குகளால் அமைக்கப்பெறுவது. கணவன்- மனைவி இருவரின் உள நடத்தைகளால் அவர்களுடைய உறவுமுறையில் ஊடாட்டம் திகழ்கிறது. அதனால் அவலமும், விரக்தியும், தாங்கள் யார் என்பது பற்றிய சிக்கலும் கொலை உணர்வும் தற்கொலை உணர்வு எனப் பல்வேறு நடத்தைப் போக்குகள் உருவாகின்றன. இவற்றை மனத்தில் கொண்டே காதலுக்காக மெய்ப்பாடுகளாக பிழையைப் போற்றுக் கொள்ளாமை, கொடுமை, தன்னைப் பெருமையாகப் பாராட்டல், புறங்கூறுதல், வருவார்க்கும் சொல் மறதி, சோம்பல், குடிப்பெருமை பேசி இன்புறுதல், நிலையில் தாழ்வெனக் கருதுதல், ஒப்பீட்டுக்காட்டிப் பேசுதல் என்று நிரல்படக் கூறியிருக்கும் தன்மை தொல்காப்பியரை உளவியல் வல்லுநராகவே காட்டுகிறது. இவற்றையெல்லாம் உணர்வுடைய மாந்தர் உணர்வர், பிறர் எண்ணி அறிதல் என்று அவர் கூறுவதும் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது.