ஆய்வு விளக்கம்
நல்வினை, தீவினைகளை ஆதாரமாக வைத்தும் அந்த விளையால் ஏற்படும் செயலின் அவன் அடையும் வெற்றியை முன்வைத்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வினைக்கொள்கைக்கு மாற்றாக மனிதனின் விடாமுயற்சியையும் அதனால் ஏற்படும் வெற்றியையும் சீவக சிந்தாமணியில் காணமுடிகிறது. இந்த வினைக்கொள்கையை விடா முயற்சியால் வெற்றி கொள்ளலாம் என்பது இவ்வாய்வுக்குக் கருதுகோளகக் கொள்ளப்பட்டுள்ளது.
விளக்கமுறை, திறனாய்வு முறை, பகுப்பாய்வு முறை
இவ்வாய்வேடு ஐந்து இயல்களைக் கொண்டது.
அவை,
1. தமிழ்க்காப்பிய வரலாற்றில் சீவக சிந்தாமணி
2. சீவக சிந்தாமணியில் வினை – விளக்கம்
3. சீவக சிந்தாமணியில் வினைத்தாக்கம்
4. சீவக சிந்தாமணியில் மனித முயற்சி – விளக்கம்
5. சீவக சிந்தாமணியில் மனித முயற்சியின் வெற்றிகள்
என்பனவாகும்.
வினையின் மூலம் உருவாகும் பலவினையின் தாக்கம் மனித வாழ்க்கையில் வெ வ்வேறு ஆட்கொள்கிறது என்பதைச் சிந்தாமணிப் பாடல்களின் இந்த ஆய்வு கூறுகிறது.
மனிதன் முயற்சி செய்தால் வெற்றிபெற முடியும் என்பது சீவக சிந்தாமணிப் பாடலின் வழியாகவும் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் வரலாறு மூலமாகவும் இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படுகிறது.
நல்வினைத் தாக்கத்தினைக் கந்துக்கடன், சீதத்தன், காந்தருவத்தை, பதுமை, கணமாலை, விமலை, சுரமஞ்சுரி, இலக்கனை போன்றோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் மூலம் அறிய முடிந்தது.
தீவினைத் தாக்கமாகச் சச்சந்தன் விசயை சீதத்தன், கந்துக்கடன், கோவிந்தை, குணமாலை, பதுமை, கேமசரி, சுரமஞ்சுரி ஆகியோர்களின் நிகழ்வுகளையும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப தீவினை தாக்கத்தினைத் திருத்தக்க தேவர் விளக்கியுள்ளதையும் தெளிய முடிகிறது.