ஆய்வு விளக்கம்
ஆழ்வார்களின் அமுத மொழியில் என்னென்ன வகைச் சிற்றிலக்கியம் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்று விளங்குகின்றது என்பதை ‘ஆழ்வார் பாசுரங்களில் சிற்றிலக்கிய வகைகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து கண்டுரைப்பது இவ்வாய்வேட்டின் பணியாகும்.
பக்தி உலகிற்குத் தேவையான பிரபந்தங்கள் நாலாயிரத்தில் அமைந்துள்ள காரணம் மக்களிடம் பக்தி மணம் கமழவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறி வைணவம் தழைக்க வழிவகுத்த ஆழ்வார்களின் எண்ணம் நிறைவேறி நல்வாழ்விற்கு வழிவகுத்ததாக அமைந்தமை பற்றிக் கணிப்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும்.
இவ்வாய்வு விளக்கமுறை, பகுப்புமுறைத் திறனாய்வு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளது.
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டது.
அவை,
1. ஆழ்வார்களும் சிற்றிலக்கியங்களும்
2. ஆழ்வார் பாசுரங்களில் அந்தாதி இலக்கியங்கள்
3. ஆழ்வார் பாசுரங்களில் மடல், தாது
4. ஆழ்வார் பாசுரங்களில் பிள்ளைத் தமிழ்
5. ஆழ்வார் பாசுரங்களில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, மாலை, திருவெழுக்கூற்றிருக்கை, தாண்டகம்.
என்பனவாகும்.
சிற்றிலக்கிய வழக்கில் ஆழ்வார்கள் பாசுரங்கள் இயற்றக் காரணங்கள் அக்கால வழக்கிலிருந்த சிற்றிலக்கிய நடைமுறை மக்களின் மனம் கவர்ந்த சிற்றிலக்கியங்களே ஆண்டவன் அருள் நாடபயன்இடும் என்ற மனவுணர்சு.
சமய வரை புரச்சமய நாட்டங்கள் குறைய மொழிவளங்கொண்ட இலக்கியங்கள் ஒளிகாட்டின.
காதல் வாழ்வின் வளமான பகுதி இதனை ஆண்டவன் மேல் செலுத்தி மடல், உலா, தூது, தவிப்பு முதலான பொருண்மைகளில் ஆழ்வார்கள் சிற்றிலக்கியங்கள் புனைந்தனர். சிற்றிலக்கியங்கள் ஆண்டவனைப் பாடுவதில் முதன்மைபெற்று விளங்கின.