Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நகரம் அண்ணாமலை நகர்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 608 002.
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் வீ. அமிர்தலிங்கம்
நகரம் சிதம்பரம்
ஆய்வு விவரம்
தலைப்பு சீவகசிந்தாமணி – நச்சினார்க்கினியர் உரைத்திறன்
வகைமை உரையாசிரியர்கள்
துணை வகைமை இலக்கணம்
பதிவு நாள் 2005
நெறியாளர் அ. ஜம்புலிங்கம்
துணை நெறியாளர் அ. ஜம்புலிங்கம்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
காப்பிய வரிசையில் திருத்தக்கதேவர் அருளிய ‘சீவகசிந்தாமணிக் காப்பியம்’ முழுமையான காப்பியத் தகுதியினைப் பெற்றுள்ளது. அதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் சிறப்பு வாய்ந்த உரையாசிரியர். அவர் தம் ஆழ்ந்த புலமைப்பாட்டை அறிந்து கொள்ளவும் அவரிடம் அமைந்த மொழித்திறப்பாட்டு நெறியை உலகு அறியவும், அனைவரும் பாராட்டும் தன்மையில் காப்பிய உறையை எவ்வாறு எழுதியுள்ளார் என்பதையும் விளக்குவதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பெறுகின்றது.
கருதுகோள்
காப்பியங்களுக்கு உரையாசிரியர்களின் உரைகளே வழிகாட்டுதலாயும் கதையை முழுவதும் உணரவைப்பதாயும் இருப்பதால் ஆய்வாளர்களால் இனங்காணாத பகுதியாகிய சீவக சிந்தமணியில் நச்சினார்க்கினியரின் உரைத்திறனை அறிவது என்ற கருதுகோளை மையமாக்க கொண்டு ஆராய முயலுவதுதான் இந்த ஆய்வு.
ஆய்வு அணுகுமுறை
இவ்வாய்வில் விளக்கமுறைத் திறனாய்வு, பகுப்பு திறனாய்வு, கொள்கைமுறை, ஒப்பீட்டுமுறைத் திறனாய்வுகள் பின்பற்றப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டது. அவை, 1. ஐம்பெருங்காப்பியங்களுள் சீவகசிந்தாமணி ஒரு பொதுக்கண்ணோட்டம் 2. காப்பிய உரை வரலாறும் நச்சினார்கினியரும் 3. இலக்கியப் புலப்பாட்டு நெறியும் உரைத்திறனும் 4. இலக்கணத்திறன் 5. வடமொழித்திறன் என்பனவாகும்.
முடிவுரை
உரையாசிரியர்கள் செஞ்சொல், ஆக்கச்சொல், குறிப்புச்சொல் மூன்றையும் பயன்படுத்தி உரைநடையை வளர்த்தனர் என்பதும் கருததக்கது. இம்மூன்று நெறிகளையும் நோக்கமாகக் கொண்டு சீவகசிந்தாமணி உரையை நச்சினார்க்கினியர் புலப்படுத்தியுள்ளார். தமிழில் காப்பிய உரை எழுதிய முன்னோடிகள் எண்ணத்தக்கவர்கள் காப்பிய உரைத்தொடக்கத்தில் விநாயகற் வழிபாட்டை வைத்து எழுதியள்ளனர். எனவே காப்பிய உரை எழுந்த காலம் கி.பி. ஒன்பது என்பது அறியத்தக்கது. நச்சினார்க்கினியர் உரை இயலில் தெளிவு விளக்கம் அமையும் தேவையான இடங்களில் இலக்கணக்குறிப்பளிப்பர் கொண்டு கூட்டி உரைவரையும் தன்மையர், சிறந்த மேற்கொள்களைத் தருவார்.