ஆய்வு விளக்கம்
அகம் புறம் எனப் பகுக்கப்பட்டு, வாழ்வின் அனைத்து வகையான அம்சங்களையும் தம்மகத்தே கொண்டிலங்குவன எட்டுத்தொகை நூல்கள், வாழ்க்கையில் குடும்பம், அரசு. மதம், பொருளாதாரம் ஆகிய நான்கும் தூண்களாக விளங்குவன. இதில் மதமானது இடைக்காலத்தில் உருப்பெற்றதெனலாம், ஆனால் மதத்தின் அடிப்படைகளாக விளங்கும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள்யாவும் வரலாற்றுக் காலந்தொட்டு வளர்ந்து பல்கியுள்ளன. இவ்வளர்ச்சியின் தொடக்க காலத்தையே சங்க இலக்கியங்கள் சுட்டி நிற்கின்றன.
நம்பிக்கைகள் காலங்காலமாக மக்கள் மனத்தில் வேரூன்றி உள்ளன. நம் முன்னோர்களான சங்க கால மக்கள் தனித்த நம்பிக்கையை உடையராய் விளங்கினார் என்னும் கருதுகோளை முன்வைத்து இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
வரலாற்றியல் கண்ணோட்டமும், சமூகவியல் கண்ணோட்டமும் அறிவியல் அணுகுமுறைகளும் விளக்கமுறைத் திறனாய்வு அணுகுமுறையும் இவ்வாய்வில் பின்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாய்வேடு,
1. சமூகமும் நம்பிக்கைகளும்
2. சங்க தமிழர்களின் வாழ்வும் வழிபாடும்
3. சங்கத் தமிழர்களின் விழாக்களும் சடங்குகளும்
4. நம்பிக்கைகளும் அறிவுறைகளும்
ஆகிய இயல்களைக் கொண்டது.
பல சமயங்கள் இருந்தாலும் சமயச் சண்டைகள் இல்லாது மக்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். அண்ணன் ஒரு மதமாகவும் (சேரன் செங்குட்டுவன் - சைவம்) தம்பி ஒரு மதமாவும் (இளங்கோவடிகள் - சமணர்) காலகட்டம்.
தமிழர்களின் நம்பிக்கைகளில் விரிச்சி கேட்டல், பல்லி சொல் போற்றுதல், சகுனம் பார்த்தல், நாழிகை பார்த்ல், காரிமம் செய்தல் முதலியவை இன்றைக்கும் மக்களிடையே பரவியிருப்பது அதன் வலிமையையும் மரபுணர்வையும் நம் அறிவதற்கு ஏதுவாக இருக்கின்றன. அத்துடன் மக்கள் பண்பாட்டு ரீதியாக இன்னும் திசை மாறவில்லை என்பதும் சீரான வளர்ச்சியினையே அடைந்திருக்கின்றனர் என்பதும் இதனால் அறிய முடிகிறது.
காலப்பகுப்புமுறை, ஐம்பூதங்களின் செயல்பாடு, வான இயல் செய்திகள், ஞாயிறு பற்றிய செய்திகள் விண்மீன்கள் பற்றிய தகவல்கள் முதலானவை. சங்கத் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளுக்கு உதாரணமாகத் திகழ்வனவற்றை நோக்குவது சாலச்சிறந்தது.