ஆய்வு விவரம் தேடல்
திருவாசகமும் திருவருட்பாவும் - ஓர் ஒப்பாய்வு - சி. அகிலன்
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் சென்னைப் பல்கலைக்கழகம்
நகரம் சென்னை
மாவட்டம் தமிழ் நாடு
அஞ்சல் குறியீட்டு எண் 6000005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் சி. அகிலன்
நகரம் சென்னை
ஆய்வு விவரம்
தலைப்பு திருவாசகமும் திருவருட்பாவும் - ஓர் ஒப்பாய்வு
வகைமை பக்தியிலக்கியம்
துணை வகைமை சைவம்
பதிவு நாள் 2001
நெறியாளர் இ. சுந்தரமூர்த்தி
துணை நெறியாளர் இ. சுந்தரமூர்த்தி
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
இலக்கிய ஆய்வில் ஒப்பாய்வு அணுகுமுறை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இலக்கியப் படைப்பாளரும், இலக்கண நூலாரும், சமயவாதிகளும் வளர்த்த ஒப்பீட்டுமுறை இன்று தனிப்பட்ட துறையாக ஒப்பாய்வுத்துறையாக வளர்ந்து வருகிறது. ஒப்பிலக்கிய வளர்ச்சியில் ஒரு இலக்கியத்தைப் பற்றிய அறிவு முழுமை அடைவதோடு நிறைவையும் தருகிறது. ஒருமொழி வட்டத்திற்குள் உலவும் குறுகிய மனப்பான்மை மறைகின்றது. பிறமொழி இலக்கியங்களில் இடம்பொறும் சிறந்தவற்றை ஒருமொழிபெற வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு நோக்கம்:-
“திருவாசகமும் திருவருட்பாவும் ஓர் ஒப்பாய்வு” என்னும் தலைப்பை ஒப்பிட்டு நோக்குவது சமய நோக்கிலும், இலக்கிய நோக்கிலும் நற்பயன் விளைவிக்கும். எனவே, அவற்றை ஒப்பாய்வு செய்யும் நோக்கில், இரு நூல்களும் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவரிடையே உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் ஒப்பிட்டு ஆய்தல் ஒப்பாய்வுக் கோட்பாடாகும். ஆயினும் இவ்வாய்வு பெரும்பான்மை ஒற்றுமைகளையே எடுத்துரைத்து ஆங்காங்கே மிகவும் தேவையான இடங்களில் வேற்றுமைகளையும் சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது.
அணுகு முறை:-
மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகிய இரு அருளாளர்களின் வாழ்க்கை வரலாறு, சமயத் தத்துவங்கள், பாடல் திறன்கள் முதலியவற்றை முறையே வரலாற்று நோக்கிலும், தத்துவ நோக்கிலும், இலக்கிய நோக்கிலும் ஒப்பிட்டு ஆராய்வதே இவ்வாய்வின் தனித்தன்மையாகும்.
ஆய்வு மூலங்கள்:-
திருவாசகப் பதிப்புகளும், திருவருட்பா பதிப்புகளும் இவ்வாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய திருவாசகம் மற்றும் திருவருட்பா தொடர்பான ஆய்வு நூல்கள் துணைமை ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
ஆய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக மூன்று இயல்களைக் கொண்டுள்ளன. அவை. 1. மாணிக்கவாசகர், வள்ளலார் - வாழ்வும் படைப்பும் 2. இறைமைக் கோட்பாடு 3. இலக்கியக் கோட்பாடு முடிவுரை
இயல் 1:-
மாணிக்கவாசகரைப் பற்றியும் வள்ளலாரைப் பற்றியும் ஆராய்வதாக அமையும். இருவரின் வரலாற்றுச் சுருக்கம் செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் வரலாற்று நோக்கில் எடுத்துரைத்து இருவரின் பிறப்பின் நோக்கம் - இயற்பெயர் – சிறப்புப்பெயர்கள்;- அற்புத நிகழ்ச்சிகள் பெற்ற பேறுகள் ஆகியன குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. திருவாசகத் திருவருட்பாவின் பொதுவான விளக்கங்கள் முதலில் ஆராயப்பட்டு, அடுத்துச் சிறப்பு நிலையில் விளக்கப்பட்டு ஒப்பிடப் பெற்றுள்ளன.
இயல் 2:-
மாணிக்கவாசகர் சிவபெருமானைச் சிறப்பித்து வணங்கிய நெறி எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. வள்ளலார் முருகன், சிவபெருமான், க ணபதி, அம்பிகையர்கள், திருமால் ஆகிய கடவுளரை வழிபட்டுப் போற்றிய திறம் ஆராயப்பெற்றுள்ளன. இருவரின் சைவ சித்தாந்த சிந்தனைகளும், சமரச சுத்த சன்மார்க்க நெறிகளும் தத்துவ நோக்கில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. வள்ளலார் சைவத்தின் சன்மார்க்கத்தைப் பூர்வமாகக் கொண்டு, அதற்கு உத்தரமாகச் சமரச சுத்தசன்மார்க்கத்தை நிறுவி அந்நெறியைப் பரப்பியமை தெளிவுறுத்தப்பட்டுள்ளது.
இயல் 3:-
யாப்பு பற்றி விளக்கம் தரப்பெற்று திருவாசகம், திருவருட்பா ஆகியவற்றின் யாப்பமைதி ஆராயப்பெற்றுள்ளது. இவ்விரு பக்தி நூல்களிலும் உவமைகள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதும், உருவகங்கள் எவ்வாறு கையாளப்பெற்றுள்ளன என்பதும் நோக்கப்பட்டு ஒப்பிடப் பெற்றுள்ளன. இருவரின் சொல்லாட்சி, அடைமொழிகள், இவர்கள் பின்பற்றிய வடமொழிச் சொற்கள் ஒரு பொருள் பல சொற்கள், உவமை நடை உருவக நடை, எச்ச நடை, உம்மை நடை, எதிர்மறை நடை, எடுத்தாண்ட பழமொழிகள் சொற்புலமை ஆகியன விளக்கப்பெற்றுள்ளன.
முடிவுரை:-
இவ்வாய்வு காலத்தால்வேறுபட்ட, இடம் மொழி ஆகியவற்றால் ஒன்றுபட்ட இருமெய்யுணர்வுக் கவிஞர்களையும் அவர்களின் படைப்புகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளது. பக்தியின் உச்ச நிலையை எட்டிப்பிடித்த திருவாசகத்தைப் போன்றே இறையுணர்வு உருக்கமுடன் பாடிய பக்திப் பாடல்களாகத் திருவருட்பா இருப்பதால் திருவருட்பா, தேவார திருவாசகங்களோடு சேர்ந்து பாடக்கூடிய அளவிற்குச் சிறப்புப் பெற்றது என்ற சான்றோர் அனைவராலும் சிறப்பிக்கப்பெற்றுள்ளது. பக்தி இலக்கிய உலகில் உள்ளடக்கத்தாலும், புறத்தோற்றத்தாலும் இலக்கியத் திறத்தாலும் உணர்த்தும் முறையாலும் திருவருட்பா திருவாசகத்தை எடுத்துக்கருதும் தலைமை இடம் பெற்று விளங்குதலை இந்த ஆய்வால் துணியலாம். மொத்தத்தில் இந்த ஒப்பாய்வால் இவ்விரு பேரிலக்கியங்களின் இறைமைக் கோட்பாட்டையும் இலக்கியக் கோட்பாட்டையும் பற்றி அறிந்து ; கொள்ளலாம். மேலும், இவ்விரு இலக்கியங்களை இன்னும் பல நிலைகளில் ஒப்பிட்டு அறிவதற்கான களங்கள் உள்ளன. இலக்கிய கூறுகள், உளவியல் நோக்குகள், தத்துவக் கோட்பாடுகள், மொழியியல் சிந்தனைகள் மொழிநடை முதலான நிலைகளில் ஒப்பிட்டு ஆய்வுகள் வெளிவர வழிவகுப்பதாக இவ்விருவர்தம் படைப்புகள் குறித்த இவ்வாய்வேடு ஒரு தூண்டுதலாக அமையும்.
நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு - நா.அய்யப்பன்
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி
பல்கலைக்கழக பெயர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நகரம் நாகர்கோவில்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் நா.அய்யப்பன்
நகரம் நாகர்கோவில்
ஆய்வு விவரம்
தலைப்பு நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு
வகைமை நாட்டுப்புறவியல்
துணை வகைமை
பதிவு நாள் 2000
நெறியாளர் சா. செல்லையாபிள்ளை
துணை நெறியாளர் சா. செல்லையாபிள்ளை
ஆய்வு விளக்கம்
முன்னுரை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் என்ற ஊர்கல்குளம் என்று வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள்தலைநகராகப் பத்மனாபபுரத்தைக் கொண்டிருந்தனர். சேர நாட்டின் தலைநகர் என்ற காரணத்தால் படைகளை வைத்திருப்பதற்கும், உணவு உற்பத்தி செய்து சேகரிப்பதற்கும், உரிய வசதிகள் உள்ளன. மலையரண், காட்டரண், நீர்அரண், மதில் அரண் என்ற நான்கு வகை அரண்களையும் உடைய இடமாகவும் இந்நகர் அமைந்துள்ளது. மேலும் 1920ஆம் ஆண்டு முதல் பத்மனாபபுரம் நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
ஆய்வுத்தலைப்பு
‘நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு’ என்பது இவ்வாய்வின் தலைப்பு
முன்னோடிகள்
1.மேல்நாட்டறிஞர்களின் கருத்துக்கள் 2. தமிழ் நாட்டறிஞர்களின் கருத்துக்கள் 3. வயல் பெயராய்வின் முன்னோடிகள் போன்றவையே ஆய்வாளர் கையாண்ட முன்னோடிகளாகும்.
ஆய்வின் நோக்கம்
நன்செய், புன்செய் நிலங்களின் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டுள்ளன, எக்காரணங்களால் அப்பெயர்கள் அமைந்துள்ளன என்பவையும், களத்தின் அமைப்பு, தொழில் உற்பத்தி நம்பிக்கைகள் முதலானவற்றை வெளிக் கொணர்வதே ஆய்வின் நோக்கமாகும்.
அணுகு முறைகள்
அமைப்பியல் அணுகுமுறை, இலக்கண, இலக்கிய அணுகுமுறைகள், களவாய்வியல் அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை, நிலவியல் அணுகுமுறை, பகுப்பாய்வியல் அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை முதலான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு 1.ஆய்வு அறிமுகம். 2. நன்செய் புன்செய் நிலங்களின் பெயரமைப்பு 3. கள அமைப்பு 4. தொழில் உற்பத்தி 5. நம்பிக்கைகள் 6. மொழிமாற்றம் 7. நிறைவுரை என ஆய்வேடு ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
இயல் ஒன்று
ஆய்வு அறிமுகம், முகவுரை, ஆய்வுத்தலைப்பு, முன்னோடிகள், ஆய்வு நோக்கம், அணுகுமுறைகள், தகவல் திரட்டியமுறை, கையாண்ட உத்திகள், ஆதாரங்கள், நடை, ஆய்வுப்பகுப்பும் விளக்கமும் என்ற தலைப்புகளில்அமைகிறது.
இயல் இரண்டு
நன்செய், புன்செய் நிலங்களின் பெயரமைப்பு, பொதுப்பெயர், சிறப்புப் பெயர், அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. மேற்படி நிலங்கள்பெயர்கள் அடிப்படையிலும், பிற செய்திகள் அடிப்படையிலும் ஆய்வுக்கள அமைப்பு விளக்கப்பட்டுள்ளது. நிலங்களின் பெயராய்வு அடிப்படையில் அறியப்படும் தொழில் உற்பத்தி ஆகியன இவ்வியலின் வழியாக விளக்கப்பட்டுள்ளன.
இயல் மூன்று
கள அமைப்பு என்றஇயலில்தெய்வங்கள், மக்கள், நீர்வளம், ஊர்கள், இடம் பெற்றுள்ளன. இவற்றின் கருப்பொருளை, இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என்று பாகுபாடு செய்து இயற்கையாகவே தோன்றுவதை இயற்கைப் பொருள் என்றும், செயற்கையாகத் தோன்றுவதை செயற்கைப் பொருள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இயல் நான்கு
களத்தில் நிலங்களின் பெயராய்வு அடிப்படையில் அறியப்படும் தொழில் உற்பத்தி ஆகியன இவ்வியலின் வாயிலாக அறியப்படுகின்றன.
இயல் ஐந்து
களத்தில நிலங்களின் பெயராய்வு வழி அறியப்படும் நம்பிக்கைகள் ஒரு இயலாகக் கொள்ளப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
இயல் ஆறு
நிலங்களின் பெயர்கள் தற்பொழுதுள்ள வடிவங்களின் முந்தைய வடிவங்களிலிருந்து எவ்வாறு திரிந்துள்ளன என்பவற்றை மொழிமாற்றம் இயல் வழியாக கண்டறியப்பட்டுள்ளது.
இயல் ஏழு
ஆய்வு செய்து கண்ட முடிவுகள் நிறைவுரை இயலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன
முடிவுரை
நிலப்பெயர்களால் இப்பகுதியில் உள்ள மூலிகை வளத்தை அறிய முடிகிறது. குமரிமாவட்டம் சித்த மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகின்றமைக்கு இக்களப்பகுதியின் இயற்கைச் சூழல் காரணமாக அமைந்துள்ளது எனவும் ஆய்வு மூலம் அறியப்படுகிறது. களத்தில் நன்செய் பயிர் உற்பத்தி அதிகமாகக் காணப்படுகிறது. இதற்குக் குளத்துப்பாசனத்தை விட ஆற்றுப் பாசனத்தைத் தான் மிகவும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக களத்தில் பல குளங்கள் புன்செய் பயிர் செய்யும் நிலமாக மாறியுள்ளது என்பதையும், பல புன்செய் நிலங்கள் வீடுகளாகவும், கடைகளாகவும் உருவாகியுள்ளது என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக களத்தில் மக்கள் தங்களுக்குரிய நிலங்களில் தேவைக்கேற்ப நன்செய் பயிற்களை உற்பத்தி செய்கின்றனர். தேவைக்கதிகமான இடம் உள்ளவர்கள், பிற இடங்களைப் பணப்பயிர் செய்ய குத்தகைக்கு அல்லது பாட்டத்திற்கு விட்டுவிடுகின்றனர். இவ்வாறு நிலங்களைப் பிறருக்குப் பயிர் செய்ய கொடுத்தாலும் உரிமையாளரின் பெயரே நிலத்திற்குக் களத்தில் வழங்கப்படுகிறது. பொதுவாகக் களத்தில் நன்செய், புன்செய் நிலப்பெயர்கள் அமைந்த முறைப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர், களஅமைப்பு, தொழில் உற்பத்தி, நம்பிக்கைகள், பட்டப்பெயர்கள் இவற்றின் அடிப்படையில் எவ்வாறெல்லாம் நிலப்பெயர்கள் அமைந்துள்ளன என்பவற்றை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் - என். பாரதி
நிறுவன விவரம்
நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 625 002
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் என். பாரதி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்
பதிவு நாள் 2008
நெறியாளர் லதா வர்மா
துணை நெறியாளர் லதா வர்மா
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டது.அவை 1. எஸ். ஆரின் வாழ்க்கை வரலாறு 2. ஆசிரியப் பெருமக்கள் 3. நல்லாசிரியர் 4. ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் 5. தேர்ந்த இசைக்கலைஞர் 6. சிறந்த வாக்கேயக்காரர். என்பனவாகும்
முடிவுரை:-
சிறந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்கவராக, அறிவாற்றல் மிக்கவராக, அன்புள்ளம் கொண்டவராக, நல்லாசிரியராக, தேர்ந்த இசைக்கலைஞராக, ஆழ்ந்த ஆராய்ச்சியாளராக வாக்கேயக்காரராகத் திகழ்ந்த எஸ். ஆரை ‘இசைமேதை’ என்று உலகம் போற்றுவது, இசையைப் போற்றுவது போல் ஆகும். இசைக்காக இசையென்றே வாழ்ந்து காட்டிய சிறந்த மனிதரின் நினைவுகள், அவருடன் பழகியவர்களுக்கும் அவரை அறிந்தவர்களுக்கும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து என்றும் நீங்காதவை. ஆலமரம் போல் அவருடைய புகழ் எங்கும் பரந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும்.
1