ஆய்வு விவரம் தேடல்
சிற்பியின் கவிதைகளில் கருத்துப்புலப்பாட்டுத் திறனும் உத்திகளும் - மு. சிவசுப்பிரமணியன் (பொள்ளாச்சி)
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதியார் பல்கலைக்கழகம்
நகரம் கோயம்புத்தூர்
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் மு. சிவசுப்பிரமணியன் (பொள்ளாச்சி)
நகரம் பொள்ளாச்சி
ஆய்வு விவரம்
தலைப்பு சிற்பியின் கவிதைகளில் கருத்துப்புலப்பாட்டுத் திறனும் உத்திகளும்
வகைமை இக்காலஇலக்கியங்கள்
துணை வகைமை கவிதை
பதிவு நாள் 2004
நெறியாளர் பொ. மா. பழனிசாமி
துணை நெறியாளர் பொ. மா. பழனிசாமி
ஆய்வு விளக்கம்
முன்னுரை
பல்வேறு இலக்கிய அனுபவங்களையும், இலக்கிய முதிர்ச்சியையும் பெற்ற சிற்பியின் கவிதைப் படைப்புகளின் சிறப்பையும், படைப்பாக்கத் திறனையம் வெளிப்படுத்த இவ்வாய்வு வழிவகுக்கிறது.
ஆய்வு அணுகுமுறை
விளக்க, தொகுப்பு, பகுப்பு, ஒப்பீட்டு, தனிநிலைஆய்வு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. சிற்பியின் கவிதைகளில் பன்முகப் பார்வை 2. சிறபியும் மலையாளக் கவிஞர்களும் 3. சிற்பியின் கவிதைகளில் அகமும் புறமும் 4. சிற்பியன் கவிதை உத்திகள் 5. சிற்பியின் காப்பிய உத்திகள் 6. சிற்பியின் சொல் உத்திகள் ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது.
முடிவுரை
சமூகக் கருத்துக்களை வெளியிடுவதற்குத் தத்துவப் பின்புலங்களைக் கவிஞர் சிற்பி பய்னபடுத்தியுள்ளார். கார்ல் மார்க்ஸின் மார்க்சீயக் கோட்பாட்டினைக் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். மார்க்சியத்தின் முதுகெழும்பு போன்றது வர்க்கப் பேராட்டம், இதைச் சிற்பியின் கவிதைகளில் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் வறுமை தீர்க்க முடியாமல் நோய்க்கு காரணமாய் அமைகின்றது. பின் வறுமையின் காரணமாக நோய்கு மருத்துவம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. ஆதிக்க வர்க்கங்களால் உழைப்பாளி வர்க்கம் சுரண்டப்படுவதிலிருந்து தடுத்து நிறுத்திச் சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்ற தீர்வினைச் சிற்பியின் கவிதைகள் தருகின்றன. பெண்கள் சிந்தனைகள் வாயிலாகப் பெண்கள் ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் பெண்களுக்கு பொருளாதார உரிமை வேண்டும் என்றும் பாலியல் சுதந்திரம் வேண்டும் என்றும் வலியுறுத்திகிறார். சிற்பி தலித்தியம் பற்றிப் பேசுகையில் தலித்துகள் துன்நாய் நின்று போராடுகின்ற பொழுது ஆளும் வர்க்கமாய் நிற்கும் ஆதிக்கச் சாதிகளாகிய சிகரங்கள் பெடியாகும் என்று குறிப்பிடுகிறார்.
நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு - நா.அய்யப்பன்
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி
பல்கலைக்கழக பெயர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நகரம் நாகர்கோவில்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் நா.அய்யப்பன்
நகரம் நாகர்கோவில்
ஆய்வு விவரம்
தலைப்பு நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு
வகைமை நாட்டுப்புறவியல்
துணை வகைமை
பதிவு நாள் 2000
நெறியாளர் சா. செல்லையாபிள்ளை
துணை நெறியாளர் சா. செல்லையாபிள்ளை
ஆய்வு விளக்கம்
முன்னுரை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் என்ற ஊர்கல்குளம் என்று வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள்தலைநகராகப் பத்மனாபபுரத்தைக் கொண்டிருந்தனர். சேர நாட்டின் தலைநகர் என்ற காரணத்தால் படைகளை வைத்திருப்பதற்கும், உணவு உற்பத்தி செய்து சேகரிப்பதற்கும், உரிய வசதிகள் உள்ளன. மலையரண், காட்டரண், நீர்அரண், மதில் அரண் என்ற நான்கு வகை அரண்களையும் உடைய இடமாகவும் இந்நகர் அமைந்துள்ளது. மேலும் 1920ஆம் ஆண்டு முதல் பத்மனாபபுரம் நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
ஆய்வுத்தலைப்பு
‘நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு’ என்பது இவ்வாய்வின் தலைப்பு
முன்னோடிகள்
1.மேல்நாட்டறிஞர்களின் கருத்துக்கள் 2. தமிழ் நாட்டறிஞர்களின் கருத்துக்கள் 3. வயல் பெயராய்வின் முன்னோடிகள் போன்றவையே ஆய்வாளர் கையாண்ட முன்னோடிகளாகும்.
ஆய்வின் நோக்கம்
நன்செய், புன்செய் நிலங்களின் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டுள்ளன, எக்காரணங்களால் அப்பெயர்கள் அமைந்துள்ளன என்பவையும், களத்தின் அமைப்பு, தொழில் உற்பத்தி நம்பிக்கைகள் முதலானவற்றை வெளிக் கொணர்வதே ஆய்வின் நோக்கமாகும்.
அணுகு முறைகள்
அமைப்பியல் அணுகுமுறை, இலக்கண, இலக்கிய அணுகுமுறைகள், களவாய்வியல் அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை, நிலவியல் அணுகுமுறை, பகுப்பாய்வியல் அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை முதலான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு 1.ஆய்வு அறிமுகம். 2. நன்செய் புன்செய் நிலங்களின் பெயரமைப்பு 3. கள அமைப்பு 4. தொழில் உற்பத்தி 5. நம்பிக்கைகள் 6. மொழிமாற்றம் 7. நிறைவுரை என ஆய்வேடு ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
இயல் ஒன்று
ஆய்வு அறிமுகம், முகவுரை, ஆய்வுத்தலைப்பு, முன்னோடிகள், ஆய்வு நோக்கம், அணுகுமுறைகள், தகவல் திரட்டியமுறை, கையாண்ட உத்திகள், ஆதாரங்கள், நடை, ஆய்வுப்பகுப்பும் விளக்கமும் என்ற தலைப்புகளில்அமைகிறது.
இயல் இரண்டு
நன்செய், புன்செய் நிலங்களின் பெயரமைப்பு, பொதுப்பெயர், சிறப்புப் பெயர், அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. மேற்படி நிலங்கள்பெயர்கள் அடிப்படையிலும், பிற செய்திகள் அடிப்படையிலும் ஆய்வுக்கள அமைப்பு விளக்கப்பட்டுள்ளது. நிலங்களின் பெயராய்வு அடிப்படையில் அறியப்படும் தொழில் உற்பத்தி ஆகியன இவ்வியலின் வழியாக விளக்கப்பட்டுள்ளன.
இயல் மூன்று
கள அமைப்பு என்றஇயலில்தெய்வங்கள், மக்கள், நீர்வளம், ஊர்கள், இடம் பெற்றுள்ளன. இவற்றின் கருப்பொருளை, இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என்று பாகுபாடு செய்து இயற்கையாகவே தோன்றுவதை இயற்கைப் பொருள் என்றும், செயற்கையாகத் தோன்றுவதை செயற்கைப் பொருள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இயல் நான்கு
களத்தில் நிலங்களின் பெயராய்வு அடிப்படையில் அறியப்படும் தொழில் உற்பத்தி ஆகியன இவ்வியலின் வாயிலாக அறியப்படுகின்றன.
இயல் ஐந்து
களத்தில நிலங்களின் பெயராய்வு வழி அறியப்படும் நம்பிக்கைகள் ஒரு இயலாகக் கொள்ளப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
இயல் ஆறு
நிலங்களின் பெயர்கள் தற்பொழுதுள்ள வடிவங்களின் முந்தைய வடிவங்களிலிருந்து எவ்வாறு திரிந்துள்ளன என்பவற்றை மொழிமாற்றம் இயல் வழியாக கண்டறியப்பட்டுள்ளது.
இயல் ஏழு
ஆய்வு செய்து கண்ட முடிவுகள் நிறைவுரை இயலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன
முடிவுரை
நிலப்பெயர்களால் இப்பகுதியில் உள்ள மூலிகை வளத்தை அறிய முடிகிறது. குமரிமாவட்டம் சித்த மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகின்றமைக்கு இக்களப்பகுதியின் இயற்கைச் சூழல் காரணமாக அமைந்துள்ளது எனவும் ஆய்வு மூலம் அறியப்படுகிறது. களத்தில் நன்செய் பயிர் உற்பத்தி அதிகமாகக் காணப்படுகிறது. இதற்குக் குளத்துப்பாசனத்தை விட ஆற்றுப் பாசனத்தைத் தான் மிகவும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக களத்தில் பல குளங்கள் புன்செய் பயிர் செய்யும் நிலமாக மாறியுள்ளது என்பதையும், பல புன்செய் நிலங்கள் வீடுகளாகவும், கடைகளாகவும் உருவாகியுள்ளது என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக களத்தில் மக்கள் தங்களுக்குரிய நிலங்களில் தேவைக்கேற்ப நன்செய் பயிற்களை உற்பத்தி செய்கின்றனர். தேவைக்கதிகமான இடம் உள்ளவர்கள், பிற இடங்களைப் பணப்பயிர் செய்ய குத்தகைக்கு அல்லது பாட்டத்திற்கு விட்டுவிடுகின்றனர். இவ்வாறு நிலங்களைப் பிறருக்குப் பயிர் செய்ய கொடுத்தாலும் உரிமையாளரின் பெயரே நிலத்திற்குக் களத்தில் வழங்கப்படுகிறது. பொதுவாகக் களத்தில் நன்செய், புன்செய் நிலப்பெயர்கள் அமைந்த முறைப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர், களஅமைப்பு, தொழில் உற்பத்தி, நம்பிக்கைகள், பட்டப்பெயர்கள் இவற்றின் அடிப்படையில் எவ்வாறெல்லாம் நிலப்பெயர்கள் அமைந்துள்ளன என்பவற்றை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் - என். பாரதி
நிறுவன விவரம்
நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 625 002
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் என். பாரதி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்
பதிவு நாள் 2008
நெறியாளர் லதா வர்மா
துணை நெறியாளர் லதா வர்மா
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டது.அவை 1. எஸ். ஆரின் வாழ்க்கை வரலாறு 2. ஆசிரியப் பெருமக்கள் 3. நல்லாசிரியர் 4. ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் 5. தேர்ந்த இசைக்கலைஞர் 6. சிறந்த வாக்கேயக்காரர். என்பனவாகும்
முடிவுரை:-
சிறந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்கவராக, அறிவாற்றல் மிக்கவராக, அன்புள்ளம் கொண்டவராக, நல்லாசிரியராக, தேர்ந்த இசைக்கலைஞராக, ஆழ்ந்த ஆராய்ச்சியாளராக வாக்கேயக்காரராகத் திகழ்ந்த எஸ். ஆரை ‘இசைமேதை’ என்று உலகம் போற்றுவது, இசையைப் போற்றுவது போல் ஆகும். இசைக்காக இசையென்றே வாழ்ந்து காட்டிய சிறந்த மனிதரின் நினைவுகள், அவருடன் பழகியவர்களுக்கும் அவரை அறிந்தவர்களுக்கும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து என்றும் நீங்காதவை. ஆலமரம் போல் அவருடைய புகழ் எங்கும் பரந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும்.
1